ஆஸ்திரேலியா: கம்பராமாயணச் சிந்தனைகள் சொற்பொழிவு!

இந்தியச்  சிந்தனை மரபு  ஆசிரியர்,  கலாநிதி  நா.சுப்பிரமணியன் வழங்கும் கம்பராமாயணச் சிந்தனைகள் சொற்பொழிவு.

கலாநிதி நா. சுப்பிரமணியன்

இடம்: மெல்பன்   ஸ்ரீ சிவா விஷ்ணு  ஆலயம்  கலாசார மண்டபம். Boundary road, Carrum Downs
காலம் :  13-02-2016 சனிக்கிழமை  மாலை  4.00  மணி 

யாழ்.பல்கலைக்கழக  தமிழ்த்  துறையிலே  24  ஆண்டுகள்  பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற  கலாநிதி  நா.சுப்பிரமணியன்  அவர்கள்,  படிப்படியாக உயர்நிலைகளை   எய்தி  அத்துறையின்  தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும்   திகழ்ந்து,  2002  ஆம்  ஆண்டில்  ஓய்வு பெற்றுக்கொண்ட வர்.    இவர்    சிலகாலம்  தமிழகத்திலே  தங்கி  தற்பொழுது கனடா வாசியாவார்.

நால்வர்  வாழ்வும்  வாக்கும்,   கந்தபுராணம்  ஒரு  பண்பாட்டுக்களஞ்சியம், காலத்தின்  குரல்,    ஈழத்துத் தமிழ்  நாவல்  இலக்கியம்  உட்பட  சில நூல்களை     எழுதியிருக்கும்  கலாநிதி நா. சுப்பிரமணியன்  அவர்கள், தமிழக   அரசின்  விருது,   இலங்கை  தேசிய  சாகித்திய  விருது,  இலங்கை வடக்கு  – கிழக்கு  மாகாண  ஆளுநர்  விருது,   இந்திய  ஸ்டேட் பேங்  விருது தமிழகத்தின்   சேக்கிழார்  ஆராய்ச்சி  மன்றத்தின்  விருது  என்பனவற்றையும்  பெற்றவர்.

கலாநிதி நா. சுப்பிரமணியன்   அவர்களின்  அவுஸ்திரேலியா  வருகையின் நிமித்தம்   விக்டோரியா  இந்து  சங்கம்  ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்ச்சியில்   கலந்து  சிறப்பிக்குமாறு  அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர்.

letchumananm@gmail.com