இளவாலைத் திருக்குடும்பக்கன்னியர் மடத்தின் தோற்றமும் சிறப்பும்

இளவாலைக் திருக்குடும்பக்கன்னியர் மடம்‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux  என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்த Semeria (OMI)  அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.
     
கத்தோலிக்க பெண் கல்வியின் பிதாமகனாகத் திகழ்ந்த பேராயர் செமேரியா அடிகள் யாழ்ப்பாணத்துப் பெண் கல்விக்காக அயராது பாடுபட்ட பெருமகன் ஆவார். ஒரு சந்தர்ப்பத்தில் பேராயர் Semeria பின்வருமாறு எழுதினார்:
   
பெண்களுக்கு கல்வியையும்ää சமயப் போதனையையும் ஊட்டும் பொறுப்பை நம்பிக்கையோடு கையளிக்கக்கூடிய கன்னியாஸ்திரிகளின் சேவைக்காக பல ஆண்டுகளாக நான் அக்கறை கொண்டிருந்தேன். 1856 ஆம்ஆண்டில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்த வேளையிலும்,  சமயப் பெண் துறவிகளின் சேவையைப் பெறுவதற்குப் பல இடங்களிலும்,  பல தடவையும் முயற்சிகள் மேற்கொண்டேன்.
    
எங்கிருந்தாவது சில கன்னியாஸ்திரிகளை பெற்றுக் கொள்வதற்காக எனக்கு இருக்கக்கூடிய அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் எனது அனைத்து  முயற்சிகளும் தோல்வியிலேயே  முடிந்தன. ஆனால் 1861 ஆம் ஆண்டு வண.பேராயர் Semeria வின் பெருங்கனவு நனவாகியது.Bordeaux விலிருந்து

 First Mother Superior Marie Xavier Marchand 
 Rev. Sr. Marie Liguori Roger  (France)
 Rev. Sr. Marie Joseph Maroille (France)
 Rev. Sr. Stanislaus Quinn     (Irish)
 Rev. Sr. Helen Winter        (Irish)
 Rev. Sr. Marie Therese Vanmeurs (Dutch)

இந்த ஆறு கன்னியாஸ்திரிகளும் Thulous   இலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் இளவாலைக் கன்னியர் மடத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்தது.
     
1860 களில்  யாழ்ப்பாணத்தில் திருக்குடும்பக் கன்னியர் மடத்தை உருவாக்கிää இந்த அரும் கன்னியாஸ்திரிகள் ஆற்றிய கல்விச்சேவை யாழ்ப்பாணப் பெண்களின் கல்வி வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வதிவிட வசதிகள்கூட அற்ற சூழ்நிலையில் அயன மண்டலப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் அவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கினார்கள். யாhழ்ப்பாணத்திலிருந்து Bordeaux  திருக்குடும்பக் கன்னியர் மடத்திற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறார்கள்;:
     
“மழை பெய்தால் வீட்டில் ஒரே ஒழுக்கு. சனிக்கிழமை மழை பெய்து என் தலையணை நனைந்துவிட்டது. புதுமைச் சிலந்தி ஆபத்தானது. இரவில் எலிää பாம்புää தேள்ää என்பன வீட்டின் மேற்கூரையில் ஓடித்திரியும். ஆபத்தான பூமியில் நாம் வாழ்கிறோம்” இந்த நிலையிலேயே இந்தக் கன்னியாஸ்திரிகளின் கல்விப்பணி ஆரம்பமாகி இருக்கிறது.
    
வண.செமேரியா (Semeria) ஆண்டகை யாழ்ப்பாணப் பெண் பிள்ளைகளுக்குக் கல்வியறிவையும்ää மறை அறிவையும்ää ஒழுக்கசீலர்களை கற்பிப்பதிலே காட்டிய பேரார்வமே திருக்குடும்பக் கன்னியர் மடத்தின்  கல்விப் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
      
யாழ்நகரம் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் கிராமப் பகுதிகளுக்கும் திருக்குடும்பக் கன்னியர் மடம் தனது கல்விச் சேவைகளை விஸ்தரித்தது. இவ்வாறு கிராமங்களை நோக்கி விஸ்தரிக்கப்பட்ட கல்விச் சேவையின் விளைவாக இளவாலைக் கன்னியர் மடம்,  பருத்தித்துறைக் கன்னியர் மடம்ää அச்சுவேலி புனித திரேசா மடம்,  மாதகல் திருக்குடும்பக் கன்னியர் மடம்ää நாரந்தனைக் திருக்குடும்பக் கன்னியர் மடம்ää நெடுந்தீவு திருக்குடும்பக் கன்னியர் பாடசாலை என்பன தோன்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
       
கல்வி நிறுவனங்கள் எதிர்காலக் கன்னியாஸ்திரிகளை உருவாக்குதல்,  வடபுலத்தில் தமிழ் மிஷனின் மையம் ஆகியவற்றைக் கொண்ட வளாகமாக இளவாலை திகழ்ந்தது என்று குறிப்புகள் கூறுகின்றன.
       
மதர் தியோவின்,  கிளமென்ற் விக்ரறின் ஆகிய அருட் சகோதரிகள் இளவாலைக் கிராமத்தின் அறிவுக் கண்ணைத் திறந்தவர்கள் என்று கூறவேண்டும். 1929 இல் இளவாலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும்ää 1939 ஆம் அண்டு அனாதைகளுக்கான பராமரிப்பு நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டு இளவாலைக் கன்னியா மடம் தனது ஆழமான சமூகக் கல்விப் பணியினை இளவாலையில் பதித்தது எனலாம். இளவாலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் ஊர்காவற்றுரை,  மன்னார்,  நெடுந்தீவுää முல்லைத்தீவு,  வவுனியா ஆகிய இடங்களில் அரும்பபணி ஆற்றினார்கள். இளவாலையில் மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட விடுதிகள் அயல் கிராமங்களிலிருந்து வந்து இளவாலையில் பயிலுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.
      
அருட் சகோதரி சலோமின் காலத்தில் இளவாலைக் கன்னியர் மடம்; பெரும் வளர்ச்சியைக் கண்டது. வணக்கத்திற்குரிய ஆண்டகை ஜே. எமிலியானோஸ்பிள்ளையின் அனுசரணையுடன் இளவாலைக் கன்னியர் மடம் ஆற்றல்மிக்க நிறுவனமாகச் செயற்பட்டது. ஆங்கிலக் கல்வியில் அதி முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இளவாலைத் திருக்குடும்ப கன்னியர் மடத்திலிருந்து வெளியேறிய மாணவிகள் சிறந்த கல்வியறிவு கொண்டவர்களாகவும்,  ஆளுமை மிகுந்தவர்களாகவும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தின் நீண்ட வரலாற்றில் அழுத்தமான தடங்களைப் பதித்துள்ளனர்.

11.5.2013     லண்டன்.
navajothybaylon@hotmail.co.uk