உயர்தர விஷம்

கவிதை: உயர்தர விஷம் – – திரிவேணி சுப்ரமணியம் –

காற்றின் வேகத்திற்கும் 
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை 
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.

முயன்று வரவழைத்தால் 
வெறுமையாய் வந்து போவதோடு
வெறுப்பையும் தரக் கூடும்
அப்படித்தான் உறவுகளும்…

இறுக்கமில்லாத தருணங்களிலும் 
இயல்பாய் மகிழும் பொழுதுகளிலும்
மட்டுமே சுகம் வருமாகையால்
உறவுகளை நேசியுங்கள். 

உடனிருக்கும் பொழுதுகளை
இனிமையாய்க் கருதுங்கள்
தவறிக் கூட இனிமைக்காய்
கால நீட்டிப்புச் செய்யாதீர்கள்
தள்ளியிருந்தே நேசியுங்கள்
ஒளிவுமறைவில்லா உறவு
நல்லதுதான்
தொலைவில்லா உறவோ
உடனிருந்து கொல்லும்
உயர்தர விஷம்!

kmdveni@gmail.com