எழுத்தாளர் ஆனந்தமயில் காலமானார்!

எழுத்தாளர் ஆனந்தமயில் காலமானார்!எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது “ஓர் எழுதுவினைஞனின் டயரி” சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க. எழுத்தாளர் ஆனந்தமயில் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 12 சிறுகதைகள் கொண்ட ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற தொகுப்பினூடாகவே இன்று பலருக்கும் அறிமுகமானவர். 70 களில் எழுத்துலகில் அறிமுகமானவர். துரதிஸ்டவசமாக அவரின் படைப்புக்கள் அப்போது நூலுருப்பெறாத காரணத்தினால் இலக்கிய உலகில் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருந்தார். வீரகேசரி, மல்லிகை, சமர், அலை முதலான ஏடுகளில் அவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மண்ணின் பதிவாக, உயிரோட்டமான வாழ்வின் பதிவாக அவரது பல கதைகள் உள்ளன. குறிப்பாக ‘முருகைக்கற்பூக்கள்’ என்ற சிறுகதை கடற்பிரதேச வாழ்வினைப் பதிவு செய்யும் ஈழத்துக் கதைகளில் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது. மறைந்த ஆனந்தமயில் அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.

kuneswaran@gmail.com