எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் இருதய நோயால் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே நல்லுள்ளம் படைத்தோர் மூத்த எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்ற கீழுள்ள வங்கிக் கணக்கில் முடிந்தளவு தொகையைச் செலுத்தலாம்.

Name: T.S. SAMUEL
Bank : Commercial Bank
Account No.8020031185
Swift Code: CCEYLKLX

வீரகேசரி இணையம் 3/22/2012
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37230