ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு!

ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு! ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்  கவிஞர் செழியனைப்பற்றிப்பின்வருமாறு செய்தியொன்று வெளியாகியுள்ளது: “ஈழத்தின் முன்னணிக் கவிஞராக அறியப்படும் தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார். தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார்! அண்மையில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று கனடாவில் காலமானார். இவர் தாய்வீடு பத்திரிகையில் எழுதி வந்தவர். அத்தோடு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’, ‘வானத்தைப் பிளந்த கதை’, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார்.தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’ என்னும் ‘தாயகம்’ பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது.” [https://news.ibctamil.com/…/poet-writer-and-playwright-seli…]

இச்செய்தியிலுள்ள “இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’, ‘வானத்தைப் பிளந்த கதை’, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’ என்னும் ‘தாயகம்’ பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது.” என்னும் வரிகள் எனது முகநூற் பதிவிலுள்ள வரிகள். யார் இவர்களுக்கு என் பதிவின் வரிகளை மூலம் குறிப்பிடாமல், என் அனுமதியின்றிப்பாவிக்க அனுமதியளித்தது? இதனைச்சுட்டிக்காட்டி ஐபிசி தமிழ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இதுவரை அவர்களிடமிருந்து பதிலெதுவுமில்லை. எனவேதான் இந்தப்பதிவு.

இது பற்றி முகநூலில் வெளியான எதிர்வினைகள்:

S T Nalini Ratnarajah Write to them . Ask them

Chinniah Rajeshkumar விட்டு விடுங்க குறைந்த பட்சம் செழியனை பற்றி சொன்னதே ஆச்சரியம்

Terrence Anthonipillai Well Gowri, what they did is absolutely wrong, no doubt about it. But at the same time why don’t you take this as a compliment and be proud.

சுப்ரமணிய பிரபா முழுப்பதிவையுமே சுட்டு செய்தியாக போடுபவர்கள் இவர்கள் உங்களின் வரிகளைச்சுட்டார்களே என்று ஆறுதலடையுங்கள். இப்போதெல்லாம் செய்திகள் கொப்பி பேஸ்ட் தான் திருந்தமாட்டார்கள் இவர்கள்

Ajeevan Veer இது இப்போது சாதாரணமான ஒரு விடயம். இதற்காக டென்சனாகி பிரயோசனமில்லை. யாரோ எழுதியதை நாமும் தகவலாக சேர்த்துக் கொள்கிறோம். அதெல்லாம் எங்கிருந்து கிடைத்ததென்று அநேகர் சொல்வதில்லை.

Giritharan Navaratnam //யாரோ எழுதியதை நாமும் தகவலாக சேர்த்துக் கொள்கிறோம். // நண்பரே! தகவல்களாகச் சேர்த்துக்கொள்வதற்கும், வரிகளை அப்படியே பிரதிபண்ணுவதற்கும் வித்தியாசமுண்டு. ஒருவரின் வரிகள் அவரது உடமை., அவரது சிந்தனையின் பிரதிபலிப்பு. பிரதிபண்ணுவதற்கு அனுமதியில்லை.

Muralitharan Ethirveerasingam நான் எழுதியதை ஏற்கனவே எழுதி இருக்கா அப்படியா எண்டா கடுப்பு தான் வரும் விழங்குது உண்மையான படைப்பின் பிரதிபலிப்பு

Chinniah Rajeshkumar பிரபாகரன் இறந்த உடன் ஹிமால் ஏன்ற ஆங்கில சஞ்சிகை யில் எனது கட்டுரை வந்தது. அதனை அப்படியே கொப்பியடித்து காதும் மூக்கும் வைத்து டி பி எஸ் ஜெயராஜ் ஒரு கட்டுரை எழுதினார்

Rajaji Rajagopalan இந்த ஐபிசி தமிழ் இணையத்தினர் IBC Tamil Radio நமது மண்ணில் இன்று முன்னேறத் துடிக்கும் இளைய பரம்பரையினர். இவர்கள் செய்யும் கலை, இலக்கியப் பணிகளை அந்தக் காலத்தில் நாம் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டோம். தாம் அறிந்துகொண்ட தகவல்களை அவர்கள் தம் இணையத்தில் பகிர்ந்துகொள்கிறார்கள். உங்கள் செய்தியைப் பகிர்ந்ததனால் அவர்களுக்குப் பெரும் இலாபமோ உங்களுக்கு எதுவும் நட்டமோ நேரிடப்போவதில்லை. வயதில் முதிர்ந்தவர்களாகிய நாம் அவர்களைக் கை தூக்கி விடுவோம். உங்கள் வழிகாட்டல் அவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாய் அமையலாம். நட்புடன் கை நீட்டுவோம்.

Ajeevan Veer ஆரம்பத்திலேயே தவறாக இளையோரை வழி நடத்துவதாக உங்கள் கருத்து இருக்கிறது Rajaji Rajagopalan . சாதாரணமாக ஒருவரது அல்லது இன்னொருவரது பதிவு அல்லது தகவலை அல்லது செய்தியை பாவித்தால் , அதை பெற்ற இடத்தை அல்லது நன்றி என்று குறிப்பிட வேண்டும். இது ஊடக தர்மம். //உங்கள் செய்தியைப் பகிர்ந்ததனால் அவர்களுக்குப் பெரும் இலாபமோ உங்களுக்கு எதுவும் நட்டமோ நேரிடப்போவதில்லை. வயதில் முதிர்ந்தவர்களாகிய நாம் அவர்களைக் கை தூக்கி விடுவோம். உங்கள் வழிகாட்டல் அவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாய் அமையலாம். நட்புடன் கை நீட்டுவோம்.// என்பதான கருத்துகளை பகிர வேண்டாம். நீங்கள் எடுத்த தகவலை நன்றி என்றோ அல்லது courtesy என்று குறிப்பிடச் சொல்லி வழி காட்டுங்கள். இளையவர்கள் தவறலாம். அதை பெரியவர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது!!

Rajaji Rajagopalan Ajeevan Veer அன்பரே, என்னுடைய கருத்தை வாசித்தபிறகு அவர்கள் நீங்கள் விரும்பும்வகையில் செய்கிறார்களா இல்லையாவென்று பாருங்கள். நான் எவருக்கும் வழி காட்டவும் இல்லை, எவரையும் குறை சொல்லவும் இல்லை. மன்னித்துவிடுவோமென்றே சொல்கிறேன். நாம் எழுதுவதும் பேசுவதும் நமது சிந்தனையும்கூட நமக்கே முழுக்கச் சொந்தமானது, நமக்கு முதல் எவருமே இதைச் செய்தது கிடையாது என்று அடித்துக் கூறுவீர்களா? பார்க்கப்போனால் எல்லாமே எங்கிருந்தோ ஆரம்பமானதுதான். ஆதலால் அமைதி கொள்ளுங்கள்.

Giritharan Navaratnam //உங்கள் செய்தியைப் பகிர்ந்ததனால் அவர்களுக்குப் பெரும் இலாபமோ உங்களுக்கு எதுவும் நட்டமோ நேரிடப்போவதில்லை. // ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று. சட்டத்தரணியாகிய நீங்களே இவ்விதம் கூறுவது ஆச்சரியமாகவுள்ளது. நல்லதைச் செய்வதற்காகக் கூடாததையும் நல்லதென்று ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் தவறாக வழியினைக் காட்டுகின்றீர்கள். அவர்கள் செய்தியொன்றினை உள்வாங்கி அவர்கள் மொழியில் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. வரிக்கு வரி பிரதி பண்ணுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பல வருடங்களுக்குப் பின்னர் எனது குறிப்பினையும், அவர்களது செய்தியினையும் வாசிக்கும் ஒருவருக்கு இது யாரின் கூற்று என்பதில் குழப்பம் ஏற்படும்.

Giritharan Navaratnam Rajaji Rajagopalan //நாம் எழுதுவதும் பேசுவதும் நமது சிந்தனையும்கூட நமக்கே முழுக்கச் சொந்தமானது, நமக்கு முதல் எவருமே இதைச் செய்தது கிடையாது என்று அடித்துக் கூறுவீர்களா?// ஒருவரின் சிந்தனை அவர் அறிந்த , அனுபவித்த விடயங்களின் அடிப்படையில் அவர் மூளையில் உருவாகும் தனித்துவம் மிக்க எண்ணங்களின் வெளிப்பாடு. அவ்வகையில் தனித்துவமானதும் கூடத்தான். ஒரு விடயத்தைப்பற்றிய அவரது தனித்துவம் மிக்க சிந்தனைகள் அவர் அதுவரை அறிந்தவற்றின் அடிப்படையில் உருவாகுமொன்று…

Ajeevan Veer கிரிதரன்! அநேகருக்கு செழியன் குறித்து தெரியாது. பழையவர்களுக்கு மட்டுமே தெரியும். உதாரணத்துக்கு எனக்கே தெரியாது. இறந்த ஒருவரைப் பற்றிய விடயங்களை தேடிய போது உங்களது தகவல்கள் நல்லவையாக இருந்து பாவித்திருப்பார்கள். சரி விட்டு விடுங்கள். நாம் நடும் மரங்களின் கனிகளை , சாப்பிட நம்மால் முடிவதில்லை. நாம் நமக்காக எதையும் செய்தால் , வெளியரங்கில் வைக்கக் கூடாது. செழியன் குறித்து பலருக்கு தெரிய வந்ததே ,அவர் மறைந்த பிறகுதான். நமது எழுத்துகளில் அநேகமானவை நம்முடையது மட்டும் அல்ல. அது நமக்கும் தெரியும்.

Rajaji Rajagopalan Ajeevan Veer Now you’re talking. இத்தகைய நியாயமான, மனித நேயமான சிந்தனைதான் நம்மிடம் இப்போது இருக்கவேண்டியது. நீங்கள் கூறியதுபோன்றே செழியனை நானும் அறிந்திருக்கவில்லை. அவர் இறந்தபிறகே பலரும் அவரைப் பற்றி எழுதத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் மரண அறிவித்தல் போன்றே இருந்தன. இந்த அறிவித்தல்களைப் படைப்பிலக்கியமெனக் கற்பிதம் செய்து நமது முதுகை நாமே தட்டிக்கொள்கிறோமோ என்று எனக்குச் சந்தேகம் உண்டாகிறது.

Giritharan Navaratnam Rajaji Rajagopalan வ்//நீங்கள் கூறியதுபோன்றே செழியனை நானும் அறிந்திருக்கவில்லை. அவர் இறந்தபிறகே பலரும் அவரைப் பற்றி எழுதத் தொடங்கினார்கள்// நீங்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் அறிந்துகொள்ளும் நிலையிலிருந்தீர்கள். மற்றவர்கள் அவரைப்பற்றி அறிந்திருந்தார்கள். அதனால் அவரது மறைவையொட்டி எழுதினார்கள். தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நீங்கள் இணையத்தில் அவரது படைப்புகளைப் படிக்காமல் விட்டது உங்கள் தவறே. பல புகலிடச் சஞ்சிகைகளுள்ள தளங்கள், நூலகத்தளம் போன்ற தளங்கள் எல்லாம் இருக்கின்றனவே. அவற்றைப் பாருங்கள். இவரைப்போன்ற மேலும் பலரை அறிந்து கொள்வீர்கள். எதிர்காலத்தில் அவர்களைப்பற்றி இவ்விதமான செய்திகள் வரும்போது ஆச்சரியப்பட மாட்டீர்கள் நண்பரே. இவரது படைப்புகள் பல தொகுப்புகளில் வெளியாகியுள்ளன. திறனாய்வாளர்கள் பலர் தம் ஆக்கங்களில் இவரை குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் செழியன் நாடறிந்த எழுத்தாளர்களிலொருவர். எவ்விதம் அவரை நீங்கள் அறியாமல் போனீர்கள்?

Rajaji Rajagopalan Giritharan Navaratnam நான் உங்களைப்போன்று முழு நேர இலக்கிய நோக்குள்ளவராக ஒருபோதும் இயங்கியதில்லை. இதனால் அறியாதுபோன பலரில் செழியனும் ஒருவராக இருந்தார். உங்கள் பதிவுகள் இணையத்தில் செழியனைப்பற்றி எழுதிய பக்கங்களைச் சொல்லுங்கள், நான் அவரைப்பற்றி அறிந்துகொள்கிறேன்.

Giritharan Navaratnam Ajeevan Veer //நமது எழுத்துகளில் அநேகமானவை நம்முடையது மட்டும் அல்ல//. எழுத்துகள் நம்முடையவை. ஆனால் அவை நாம் வாசித்த, அறிந்த உணர்தவற்றின் வெளிப்பாடு.

Giritharan Navaratnam : Rajaji Rajagopalan //உங்கள் பதிவுகள் இணையத்தில் செழியனைப்பற்றி எழுதிய பக்கங்களைச் சொல்லுங்கள், நான் அவரைப்பற்றி அறிந்துகொள்கிறேன்.// இது தர்க்கமல்ல; குதர்க்கம். இருந்தாலும் கூறுகின்றேன். நிச்சயம் பதிவுகளிலுள்ளன. பதிவுகள் தளத்துக்குச் சென்று தேடிப்பாருங்கள். மேலும் ஒரு சஞ்சிகையில் ஓரிரு படைப்புகள் வந்தாலே அவற்றுக்கு முக்கியத்துவமுண்டு.

Rajaji Rajagopalan Giritharan Navaratnam எழுத்துகள் நம்முடையவை. ஆனால் அவை நாம் வாசித்த, அறிந்த உணர்ந்தவற்றின் வெளிப்பாடு…./// இந்த நீண்ட விவாதத்துக்கு அர்த்தமுள்ளதொரு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். இதில்தான் படைப்பாளன், வாசகன், விமர்சகன் ஆகியோரின் நெஞ்சம் மார்தட்டி நிற்கிறது.

Vadakovy Varatha:  Rajan Rajaji Rajagopalan உங்கள்மீது பெருமதிப்பு வைத்திருப்பவன் நான் ,ஆனால் இன்று குறுகி நிற்கிறேன் . கோமகனின் குரலற்றவனின் குரல் தலைப்பை யூனியர் விகடன் போடடபோது வழக்கு போடுங்கள் என உசுப்பேத்தியநீங்கள் உங்களின் கதை ஒன்றின் பகுதியை போட்டு இது யார் எழுதியதது எனக்கேட்டு பின் இதை யாரோ எழுதியதாக குறிப்பிடுகிறார் எனகுறைப்படட நீங்கள் இப்படி சொல்லலாமா ? கிரி ஓர் நடு நிலையாளன் எல்லா எழுத்தர்களின் நூல்களையும் அது நல்லதோ கெடடதோ அது போய் சேர வேண்டும் என்பதற்காக அதை பற்றி குறிப்பிடுகிறவர் அவருக்கு ஒரு இழிவு என்றால் நாம் சேர்ந்து அல்லவா குரல் கொடுக்க வேண்டும்

Gowripal Sathiri Sri இதெல்லாம் சகயம்

Vadakovy Varatha Rajan ஜெயகாந்தன் ஒருமுறை அவரது யுகசந்தி கதை தலைப்பை சினிமாவிற்க்காக யாரோ திருடியபோது “விடுங்கள் இல்லாதவன் எடுத்து கொள்கிறான்” என்றாராம் ,அப்படி கடந்து போகிற விடயமல்ல இது உழைப்பு எதுவும் இல்லாமல் மற்றவன் படைப்பை எடுப்பது திருட்டு

Nanthi Varman · இதற்குப் பெயர் “இலக்கியத்திருட்டு” என்பதா?

Giritharan Navaratnam கவிதை , கதை மட்டும்தாம் இலக்கியம் என்பதல்ல. கட்டுரை, குறிப்புகள் எல்லாமே அவை கூறப்படும் மொழியின் அடிப்படையில், பொருளின் அடிப்படையில் இலக்கியமே. இவ்வகையில் முகநூற் குறிப்புகளும், பதிவுகளும் அடக்கம் நண்பரே.

Giritharan Navaratnam எதற்குப் பெயர் இலக்கியத்திருட்டு ? சிறிது விளக்குங்கள். ஆக நீங்கள் இவ்விதமான செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என்று கூறலாமா?

Paul Prahalathan : It’s like Iraq dossier. Cut & paste VILAIYAATTU.

Parathan Navaratnam திரிஷா நடித்தால் நான் நடிக்கமாட்டேன், என்று கீர்த்தி சுரேஷ் கூற என்ன காரணம்.! # இப்படியான செய்திகள் தான் அதில் அதிகம் வரும். இவர்களை போய் எல்லாம் கிரி கோவிக்ககூடாது

Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்…உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது…விடுங்கள்…

K S Sivakumaran Niyayamaana kelvi nanbarVNG.

Thambiah Pillai Sothilingam மற்றவரின் எழுத்தை பாவித்தால் அங்கே யாருடைய original என்பதையும் இணைத்துக்கொண்டார் சரி பண்புஇணைக்கப்படுவதே தயாரிப்பை அழகுபடுத்தும்

Karvanna Subhas எழுத்தில் ஆர்வங்கொண்டெழுந்து வரும் இளந்தலைமுறையை தலையிற் தடவிக்கொடுத்தாற்போல் குட்டியடக்க முயலும் வயதான எழுத்தாளர்களாலும், இரவல் எழுத்தைத் தம்முடையதுபோற் காட்டமுனையும் வல்லமை கெட்டவர்களாலும் நிரப்பப்படுகின்றது நம் சமூகம்.

Giritharan Navaratnam நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள். இளந்தலைமுறையினர் இவ்விதமான தவறுகளைப் புரிந்தால் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தட்டிக்கொடுக்க வேண்டுமென்று கூற வருகின்றீர்களா?

Karvanna Subhas அப்படியில்லை, இவ்வாறாகவெல்லாம் நடக்கின்றதெனக் கூறுகிறேன்.Karvanna Subhas அப்படியில்லை, இவ்வாறாகவெல்லாம் நடக்கின்றதெனக் கூறுகிறேன்.

Giritharan Navaratnam எழுத்துரிமை பற்றி எத்தனை கோணங்களில் எத்தனை பார்வைகள். உண்மையில் பிரமிக்க வைக்கின்றது. நானே எதிர்பார்க்காத எதிர்வினைகள் இவை. நன்றி.

Rajaji Rajagopalan மனித சமூகத்துக்கு எவ்வகை உரிமைகள் உள்ளதெனக் கருதுகிறோமோ அவையெல்லாம் இன்று பாராதீனப்படுத்தப்படுகின்றன, அரசாலும் மனிதர்களாலும். யாரிடமிருக்கிறது இதற்கெதிரான ஆயுதம்?

கணன் சுவாமி ஆனால் ஒரு ஊடகம் ஈயடிச்சான் காப்பியாக செய்தி வெளியிடுவது கேவலம். உருக்கி ஊத்தியிருகலாம். நோகாம நோம்பு கும்பிடுதல் நல்லா இல்லை. முதலில் அவருக்கு தெரிவிக்க வேண்டும் இல்லது முகநூலில் இன்னாரிடம் இருந்து எடுத்தது என்றாவது போடுதல் அழகு. I ignite lot of subjects ஆனால் அதை எனக்கே திருப்பி உருக்கி ஊற்றி படைப்பாக கூட காட்டி இருக்கிறார்கள்.

Shiva Sivasubramaniam This is definitely plagiarism.

ngiri2704@rogers.com