கனடாவில் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா

அன்பிற்குரிய கனடிய தமிழ் அன்பர்கள், வேலணையூரவர்கள், புங்குடுதீவு ஊரவர்கள், வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா உறுப்பினர்கள், வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா உறுப்பினர்கள், வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரசுவதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் ,   புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- கனடா உறுப்பினர்கள், யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்-கனடா உறுப்பினர்கள், கனடிய தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர்கள், மற்றும் கனடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் உறுப்பினர்கள்- கனடிய தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள்- தமிழ் உணர்வாளர்கள் ஆகிய அனைத்துத் தமிழ் உறவுகளே

எனதருமைத் தந்தையும், ஈழத் தமிழ்ப் பேரறிஞருமான  தமிழ்ப்பேரன்பர் வித்துவான் க வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும், அதையொட்டிய ஆறு நூல்கள், மூன்று குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவையும், வரும் 27.07.2019 சனிக்கிழமை, கனடா – ரொரன்றோவிலுள்ள அய்யப்பன் கோயில் மண்டபத்தில்( Iyappan Temple Hall,  635 Middlefield Road, Scarbirough, Ontario, M1V 5B8) , கனடாவிலுள்ள எனது தாய் மாமன்மாரின் பிள்ளைகள், வேலணை ஊரவர்கள் , புங்குடுதீவு  ஊரவர்கள், எனது யாழ் இந்து நண்பர்கள்  அவர்களின் ஆதரவுடன் கொண்டாடவுள்ளேன்.

இவ் விழாவிற்கு நீங்கள் உங்கள் உறவுகளுடன் குடும்பமாக வந்து, கலந்து  கொண்டு சிறப்பிக்க வேண்டுமென , வேந்தனாரின் தமிழ் உணர்வின் பேரால், அன்போடும் , உரிமையோடும் அழைப்பு விடுகின்றேன். இத்துடன் இந்த விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். இதனை நீங்கள் உங்கள் நண்பர்களுடன்- தமிழ் அறிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி , பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

மீண்டும்  உங்கள் அனைவரையும் 27.07.2019 நடக்கவிருக்கும் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு, மாலை 4.45 மணிக்குப் பிந்தாமல் வந்து, நிகழ்வுகள் சரியாக 5 மணிக்குத் தொடங்க ஒத்துழைக்கும்படி, அன்புடனும் , பணிவுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

” வில்லிற்கு வீரன் யாரெனில் விஜயனாகும்
விறல் தமிழ் சொல்லிற்கு வேந்தன் யார்? வேந்தனார்.”

நன்றி.
அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்
இலண்டன்

vilansei@hotmail.com