கனடா: பேராசான் கா. சிவத்தம்பி நினைவாக….

கனடா: பேராசான் கா. சிவத்தம்பி நின்வாக....அன்புடையீர், பேராசான் கா. சிவத்தம்பி அவர்களின் பிறந்த தினத்தை அவரது மறைவின்பின் வருடாவருடம் நாம் நினைவு கூர்ந்து வருவது நீங்கள் அறிந்ததே. நமது பேராசானின் பல்துறை ஆளுமையை எடுத்தியம்பும் நிகழ்வுகளையும் நடத்தி அவரைக் கொண்டாடி வருகிறோம். மறைந்த அம் மாமேதையின் ஆன்மா மகிழ்வுறும் என்ற நம்பிக்கையுடன் சில தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நிலைப்பட்ட முன்முயற்சிகளை அவருக்குச் சமர்ப்பணமாக்கியும் வருகிறோம். அவ்வகையில் பேராசிரியரின் 82ம் பிறந்த தினத்தினையொட்டிய நினைவுப் பெருநாளை எதிர்வரும் ஜூலை 6ந்தேதி நினைவுகூர இருக்கிறோம்.  இந்நினைவுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம். ஜூலை 6ந்தேதி மாலை 6.30 மணியளவில் நினைவுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பமாகும். பேராசானின் ஆளுமை குறித்த சிறப்புரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்துவார்கள். அதைத் தொடர்ந்து பேராசான் பற்றியதொரு ஆய்வுக் குறிப்புரையை கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள் வழங்குவார்கள். தொடர்ந்து பேராசானுக்குப் பெருமை செய்யும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இவ்வாண்டு பேராசானுக்கான இலக்கிய சமர்ப்பணமாக ‘பருவம்’ என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத் திரட்டாய் அமைந்திருக்கும் அந்நூல் குறித்த சுருக்கமான அறிமுகக் குறிப்புரையை ரொறன்ரோ பல்கலைக்கழக கலாநிதிநிலை ஆய்வாளர் அ. பொன்னி அவர்கள் நிகழ்த்துவார்கள்.

பேராசிரியர் நினைவாக வழங்கப்பட இருக்கும் ஆவணப்படப் பரிசை ஈழத்தில் உருவாக்கப்பட்ட ‘Tears of Blood’ என்ற குறும்படம் பெறுகின்றது. உங்கள் வருகையை எம்முடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி.

க. நவம் (416 – 627 6583)
மூர்த்தி (780 – 799 2515)
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்)

நிகழ்ச்சிக்கான உங்கள் செலவுப் பங்களிப்பு: 20 டொலர்கள்.

இடம்: காரைக்குடி செட்டிநாடு உணவக மண்டபம்.
Karaikudi Chettinad Restaurant
1225 Kennedy Road
Scarborough, ON   M1P 4Y1

பிற்குறிப்பு: அன்றைய இராப்போசனத்திற்கான சுவைமிக்க உணவுத் தேர்வாக காரைக்குடி செட்டிநாடு மசாலா தோசை, வடையுடன், தேனீர் கோப்பியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

knavam27@hotmail.com