கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்!

கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்!

– கற்சிலைமடு மாணவர்களுக்காக நூலகமொன்றினைச் சிறிய அளவில் ஆரம்பிக்க நண்பர் ஜெயக்குமரன் முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றார். அது பற்றி அவர் முகநூலில் இட்டிருந்த பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஆர்வம் உள்ளவர்கள் நூல்களை மேற்படி நூலகத்துக்கு அன்பளிப்புச்செய்து உதவலாம். நண்பரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். – பதிவுகள் –


கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்! –  ஜெயன் தேவா –

கற்சிலைமடுவின் குழந்தைகளுக்கு ஒரு சிறுவர்/குழந்தைகள் நூலகம் ஒன்றை சிறிய அளவிலேனும் அக்கிராமத்தில் உள்ள பெருந்தகையாளர்களின் உதவியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். ( ஒரு சிறு அறையேனும் தேவை.) வ.ந. கிரிதரனின் குடிவரவாளன் நாவலுடன் இந்நூலகத்தை ஆரம்பிக்க விரும்புகிறேன்.அன்பர்கள், எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கு ஒரு நூலையேனும் இந்நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
]
தொடர்புகளுக்கு: திரு. தர்சன் (ஆசிரியர்) 0775305488