கவிதை: அதிசயக்குழந்தை

1. அதிசயக்குழந்தை – பூதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!
ஒட்டு துணிகூட இல்லாமல் …
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ….
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ….
விளையாடிகொண்டிருந்தான் ….
அதிசயக்குழந்தை …….

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் …
எதற்கு என்று கேட்டான் அவன் ….!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ….
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே …
என்றேன் ….

நீங்க மட்டும் அழுகில்லையோ…?
என்றான் அவன் – மேலும் சொன்னான் …. ஆசானுக்கு நான் சொல்வதா …?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ….
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ….!!!

மனத்தின் அழுக்கை நீக்க
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ….
உடலின் அழுக்கை நீக்கவும் …
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ….
கோபப்படும் போது ” நெருப்பாய்” கொதிக்குறீங்க ..
உள்ளத்தை துளைக்கும் சொல்லை …
காற்றோடு கலக்கிறீங்க ….
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் …
அசுத்தமாக்கும் போது
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும்
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ….?

என்றான் – அதியக்குழந்தை…..!!!

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து …
அதட்டினேன் …..

விழுந்து விழுத்து சிரித்தான் ….

ஏனடா சிரிகிறாய்….?

இயலாமையின் இறுதி கருவியே ….
அதிகாரம் என்றான் …!

திகைத்து நின்றேன் ….!!!

தன் பகுத்தறிவால் விடைதராமல் ….
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் …
ஆசானே – உம்மில் குற்றமில்லை ….
” ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது “
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு
எனக்கு சரிவராது என்றான்.


2. அதிசயக்குழந்தை – உறக்கம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!ஏய்
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ….?

உறக்கம் என்றால் என்ன ….?
நானே சொல்கிறேன் ஆசானே ….!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ….
மூளை செயல் இழப்பது மரணம் ….
கண்ணை மூடுவது உறக்கமில்லை….
கண் மூடுவது என்பது சாதாரண …
விடயமும் இல்லை மிக கடின வேலை….!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் …?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் …
கடினமில்லை .இரண்டு இமையும்
இணைத்தால் போது அது கண் மூடல் …
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ….
தவறு கண்மூடினால் ஒன்றுமே ….
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ….
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ….
உண்மை கண் மூடல் …..!!!

புருவத்தின் மத்தியில் நினைவை
கொண்டுவந்து கண்மூடி உள்ளே …
பாருங்கள் உங்களை நீங்கள் ….
அறிவீர்கள் உங்களின் அத்துணை …
குணமும் படமாய் ஓடும் …..
என்று அந்த படமெல்லாம் ஓடி …
கலைத்து வெறும் திரை கண் முன் …
வருகிறதோ அன்றே நீங்கள் ….
உண்மையான கண் மூடல்
அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் ….

வாழ்நாளில் என்றொ ஒரு நாள் …
இப்படி கண்மூடிபாருங்கள் ….
சொர்க்கம் தெரியும் என்றான் ……!!!


3. அதிசயக்குழந்தை – உணவு

கவிதை வாசிப்போம் வாருங்கள்!சாப்பிடாயா என்று கேட்டேன் ….
சாப்பிடேன் என்றான் …..
அதிசய குழ்ந்தை …….!!!

என்ன சாப்பிட்டாய் ….?

என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் ….
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் …
என்று சொன்னான் …..!!!

எப்படி சாப்பிட்டாய் ….?

அடித்து பறித்து சாப்பிட்டேன் ….

நீ அத்தனை கொடூரமானவனா …?

நான் மட்டுமல்ல நீங்களும் ….
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் …..!!!

தன் இனத்தை பெருக்க வந்தத ….
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த ….
அத்தனை உயிரினத்தையும் ….
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை ….
பறித்துதானே – சாப்பிடுகிறோம் …..!!!

மாங்காய் தேங்காய் என்று ….
அவை முதுமை அடைய முன்னரே ….
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் …..

குடியோடு குடித்தனமாய் தூங்கும் …
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே ….
கண்ணி வைத்து கொலை செய்து ….
சாப்பிடுகிறோம் ……

கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ….
பறவைகள் – சாரை சாரையாய் …
அலைந்து திரியும் மீன்கள் ….
அத்தனைக்கும் வலைபோட்டு ….
வாழ்வுரிமையை சாப்பிடுகிறோம் ….!!!

எல்லாமே இறைவன் எமக்கே ….
படைத்தவன் என்று இறைவனை ….
பிணையாக வைத்து அத்தனையின் ….
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ….!!!

கேட்டால் அதுதான் உணவுசங்கிலி ….
என்று ஒரு கோட்பாட்டையும்
வைத்திருக்கிறோம் – சொல்லுங்கள் ….!!!

ஆசானே ….!!!!

சமைத்து சாப்பிட்டோமா ….?
சண்டையிட்டு – மனசமரசத்துடன்
சாப்பிட்டோமா ….?

kavikiniyavan@gmail.com