கவிதை: உஷ்ணப்பூக்கள்!

முல்லை அமுதன்

தினமும்
தன் பூந்தோட்டத்தை
அழகு பார்த்தாள்
என் மனைவி.
ஒவ்வொரு பூவாய்க் கையில்
எடுத்து ரசித்தாள்.
நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று
ஆவலாய்
கதவைத் திறந்தாள்.

பூக்கள் களவாடப்பட்டிருந்தன.
அழுதபடி உள்ளே வந்தவள்
கூறினாள்: “பூக்களை யாரோ
களவாடிவிட்டார்கள்”

வாரத்தைகளை விட
விம்மலே அதிகமாயிருந்தது.

அவளின் உழைப்பு,கனவு எல்லாம்
அவையே.

இன்றிரவு நட்சத்திரங்களை
எண்ணமுடியாதவாறு
அவளின் அழுகை
தலையணை
நனைக்க
என் கனவும்,கவிதையும்
உதிரும்…உஷ்ணப்பூக்களாய்

mullaiamuthan@gmail.com