கவிதை: நாங்களும் எச்சங்களே

கவிஞர் வாண்மதிஎன் கண்முன்னே
எத்தனையோ உருவங்கள்
அத்தனையும்
ஏதோவொரு
தருணத்தில்
ஆண்
என்றே
அடையாளப்படுத்தப்படுகின்றன.

பேச்சில் போலித்தனம்
பார்வையில் கள்ளத்தனம்
செய்கையில் சில்மிசம்
மனதில் வக்கிரம்

இதைத்தாண்டி
இராவணன் போல ஆண்
இந்தப்பூமியில்
இருந்தால்
பெண்ணுக்கான
மதிப்பையும்
பாதுகாப்பையும்
இருபது கைகளையும்
இரண்டாக
இணைத்துத் தருவானா?

இராமனாக வேசமிடாதீர்
இராவணனாக வாழுங்கள்! நாங்களும்
சீதையும்
கண்ணகியும்
மாதவியும்
பாஞ்சாலியும்
பரிணமித்த
பாரில்
பிறந்த எச்சங்கள்தான்!

mathivathani@bluewin.ch