கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

1. காதலுடன் பேசுகிறேன்

காணாமல் போனால் ……
கண்டுபிடித்துவிடலாம்……
உனக்குள் காணாமல்……
போன என்னை எப்படி…..
கண்டுபிடிப்பாய்…..?

காதலை மறைக்க……
முடியாது…….
கழுத்தில் உள்ள……
தாலியை சேலையால்….
மறைப்பது போல்….!

நீ
பலாப்பழம் போல்…..
இதயத்தில் அன்பை……
வைத்துக்கொண்டு……
வார்த்தையை முள்ளாய்….
கொட்டுகிறாய்…..!

பாவம் என் காதல்….
புண்ணியமாய்…..
கிடைத்த உன்னை …….
இழந்துவிட்டது…..!

என்னை ஏமாற்றிய…….
அடையாள சின்னம்……
உன் தாலி……..!

எதுவுமே …….
நிலையில்லை…..
அனுபவத்தில்
உணர்த்தினாய்………
திருமணத்தில்………..!

2.
உன்னை
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக
இல்லாமலும்….!

நீ நான்கு …..
பேரை பார்த்து திட்டும்….
குடிகாரனகவும் …..
இல்லாமல் இருந்தால்…….
நீ ராஜ வாழ்க்கை……..
வாழ்கிறாய்………….!

kavikiniyavan@gmail.com