குட்டி ஜப்பானின் குழந்தைகள் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஆவணப்படத் திரையிடல்

குட்டி ஜப்பானின் குழந்தைகள் - தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஆவணப்படத் திரையிடல்  

நாள்: 09-09-2012 (ஞாயிற்றுக் கிழமை)

நேரம்: மாலை 5 மணிக்கு


இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, மேற்கு கே.கே. நகர் 

(உதயம் திரையரங்கில் இருந்து எம். ஜி. ஆர் நகர் செல்லும் சாலையில் கடைசி வலது பக்கம் திரும்பினால் புதுச்சேரி விருந்தினர் மாளிகை வரும். அங்கிருந்து ஐந்து கட்டிடங்கள் தள்ளி தியேட்டர் லேப் அரங்கம் இருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
திரையிடப்படும் படம்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் (இயக்கம்: சலம் பென்னுர்கர்)

நண்பர்களே, சிவகாசியில் பட்டாசு உட்பட இதர தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறுவர்கள் பற்றிய இந்த ஆவணப்படம் இந்த சமூகத்தின் பொறுப்புணர்வை அதன் தளங்களில் நின்று மறு விசாரனைக்கு உட்ப்படுத்துகிறது. 

இந்திய அளவில் மிக அதிக அளவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படம் எதிர்வரும் ஞாயிறு அன்று சென்னையில் திரையிடப்படுகிறது. குறைந்தபட்சம் எதிர்கால சந்ததிகளான குழந்தைகளையாவது கொடூர மரணத்தின் பிடிகளில் இருந்து தப்பிவிக்க நாம் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இந்த படம் ஒரு உதுதலாக இருக்கலாம். வாருங்கள் சேர்ந்தே வடம் பிடிப்போம்.

 

தமிழ் ஸ்டுடியோ உங்கள் அனைவரையும் அழைக்கிறது. அனைவரும் வருக… அனுமதி இலவசம். 

அன்புடன்

www.thamizhstudio.com
+919840698236, +919894422268