குரு அரவிந்தனின் குறுநாவலுக்குக் ‘கலைமகள்’ விருது!

 
குரு அரவிந்தன்இவ்வருடம் (2011) சர்வதேச ரீதியாக நடந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் குறுநாவல் போட்டியில் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ என்ற குறுநாவல் இரண்டாவது பரிசைப் பெற்றிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக் குமுறல்கள் இவைகளை எல்லாம் வெளிப்படுத்தியதற்காக குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ குறுநாவலைத் தேர்வு செய்துள்ளதாக நடுவர்கள் குறிப்பிட்டனர். திரு. பி. மணிகண்டன், திரு. ப. ஸ்ரீதர், டாக்டர் லட்சுமி ஆகியோர் இப்போட்டிக்கு நடுவர்களாகக் கடமையாற்றினர். தேர்வின்போது கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர், பதிப்பாசிரியர் திரு. நாராயணசாமி ஆகியோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவு குறுநாவல் போட்டியிலும் ஈழத்தமிழர்களின் சோகக் கதை சொல்லும் குரு அரவிந்தனின் ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் பரிசு பெற்றுப் பலரின் பாராட்டையும் பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

தகவல்: கெஆர்