குழந்தைகள் குறும்பட விழா!

குழந்தைகள் குறும்பட விழா!திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட குறும்படங்கள் திரையிடல்  வெள்ளியன்று நடைபெற்றது.புதுவை யுகபாரதி, திருப்பூர் திருநாவுக்கரசு, கோத்தகிரி தவமுதல்வன் உட்பட பல குறும்பட இயக்குனர்கள் இயக்கிய குழந்தைகளின் கல்வி, சுற்றுசூழல் பாதுகாப்பு, குழந்தைத்தொழிலாளர்கள் நிலைமை, குழந்தைகளுக்கான கல்வி உரிமைகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட குறும்படங்கள் காட்டப்பட்டன. தாய்த்தமிழ்ப்பள்ளி அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் முத்துசாமி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , தலைமை ஆசிரியை கிருஸ்ணகுமாரி,பெற்றோர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். குறும்படங்கள் பற்றி சிறந்த விமர்சனக் கட்டுரைகளை வழங்கிய மாணவர்கள் நர்மதா,தாரணி, வெங்கடேசுவரன், மீனாட்சி, அருண்குமார், ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

subrabharathi@gmail.com