க.பிரகாஷ் கவிதைகள்!

1. புனல் வாதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!கவிதை எழுத தெரிந்த எனக்கு
அதை வெளியிடத் தெரியவில்லை
இதுவரை எழுதிய எனது கவிதையை
வைகை ஆற்றில் – காகிதக் 
கப்பலாக ஓடவிட்டேன்

தன்னைச் சுடும்
கரையில்லாக் கடல்
இவ்வுலகுக்குப் பாழ்
கறையுள்ள மனித மனம்
மனிதகுலத்துக்கே பாழ்

மனமில்லை
மல்லிகைக்கு – நல்ல
மனமுண்டு – அதை
நுகரும் மனிதனுக்கோ
மனமும் இல்லை
மானமும் இல்லை

2. விடியலை நோக்கி…

கவிதை வாசிப்போம் வாருங்கள்!போதும் போதும்
சிந்தனையற்ற சூனியக்காரியிடமும்
வீண்பேச்சு சூனியக் காரனனிடமும்
நாட்டை இழந்தது போதும்
தேர்தல் வாக்கை  – உன்
தாத்தன் வீணடித்தான் – உன்
தகப்பன் பணத்திற்காக
விற்று விட்டான்
நீயாவது விழித்துக்கொள்
நாளை
விடியலாக அமைய….
     

3. தன்னம்பிக்கையில்லா கூட்டம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!தகுதியற்ற தலைவனுக்குத்
தரையில் விழுந்து தலைவணங்கி – தனது
பதவி தாகத்தைத் தனித்துக்கொள்ளும்
தன்னம்பிக்கையில்லா
தன்மானமற்ற – சில
மனிதக் கூட்டம் இதுவோ

பாவப்பட்டவர்கள்
பாவப்பட்டவர்கள் – ஏழைகள்
மட்டுமல்ல
விலங்கு மரம் செடி கொடிகளும்தான்
யார் என்ன செய்தாலும்
யாரும் கேளார்!

காகித-பேனா உறவு
உரசாத
காகிதமும் பேனாவும்
பெருமையுற்றதில்லை
பேனாவினால் எண்ணத்தைக்
காகிதத்தில் உரசும் போதுதான்
உயிரற்ற காகிதமும்
உயிரோட்டம் பெறுகிறது
பேசுவது என் மனசு
மட்டுமல்ல
பேனாவும் காகிதமும் தான்

4. என்ன அழகு

கவிதை வாசிப்போம் வாருங்கள்!முகிலினங்கள் முட்டும் வெள்ளியங்கிரி
ஆர்ப்பரிக்கும் அருவியாய்
கோவைக் குற்றாலம்
தெளிந்த நீரோடையாக ஒன்று
சேரும் சிறுவானி
இயற்கை வளம் கொழிக்கும்
பசுமைக்காடுகள்
மரம் செடி கொடிகள் – அங்கு
அரசியல் கொடிமரங்களில்லை
இலைத் தழைகளை உண்ணும்
விலங்கினங்களின்
ஒன்றுபட்ட வாழ்க்கை
காடே உலகமென்று
இயற்கையோடு
உறவாடும் பழங்குடிகள்
இயற்கையே தெய்வம்
கள்ளம் கபடமில்லா மக்கள்
அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும்
யார்க்கும் அடிபனியாமல் – இயற்கைக்கு
அடிபனியும் பழங்குடிகள்
மாற்றம்விரும்பா மக்கள்
மாற்றம் இயற்கைக்கா?
தொழில் நுட்பத்திற்கா?
என்றபொழுதிலும்
இயற்கையை விரும்பும்
தொல் பழங்குடிகள்

prakashkaruva@gmail.com