சித்திரையே வருக இத்தரை சிறக்கவே

வெளிதனில் விரையு மிந்த வுலகு
களிதனில் மூழ்கிடப் பிறந்ததே சித்திரை.
மன்மத ஆண்டில் மகிழ்ச்சி நிறைந்து
இத்தரை எங்கும் இன்பம் பூத்து
இனம் மதம் மொழி மற்றும்
வர்க்கம், வருணம் என்றே எங்கும்
பிரிவுகள் மலிந்த பூமியில் மீண்டும்
பிரிவுகள் நீங்கி பிறக்கவே இன்பம்.
சித்திரையே வருக இத்தரை சிறக்கவே.

பதிவுகள் தனது வாசகர்கள் மற்றும் பங்களிக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் தனது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.