சிறுகதை: வில்லுப்பாட்டுக்காரன்

பொன் குலேந்திரன்இலங்கையில் “உடப்பு “என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பது தீக்குளிப்பு திருவிழா, வில்லுப்பாட்டு, கரகாட்டம். கும்மி, கரை வலை இழுக்கும்போது   மீனவர்கள் ஒத்து பாடும் அம்பா பாடலுமே . கரப்பந்தாட்டத்துக்கும் அக்கிராமம் பிரசித்தமானது.. தென்னிந்தியாவை முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது , 16ம் நூற்றாண்டில் மதுரை மங்கம்மாவுக்கும் இராமநாதபுரம் ராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்துக்கு பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் புலம் பெயர்ந்து, நன்நீர் தேடி. கற்பிட்டி. உடப்பு ஆனவாசல் முதல் கலாஓய வரை குடியேறினர்  இவர்கள் வீரமிக்க திடகாத்திரமான மக்கள். மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு காலத்தில் செழித்து திகழ்ந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இவர்கள் தங்கள் குல தெய்வம் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். மீன் பிடித்தலும் முத்துக்குளித்தலும் இவர்கள் தொழில் .. இக்கிராமத்தை  சுற்றி பௌத்தர்களும், கத்தொலிக்ர்களும், இஸ்லாமியர்களும்  வாழும் பல சிங்கள கிராமங்கள் உண்டு  , வடமேல் மாகாணத்தில், கொழும்பு புத்தளம் வீதியில் பத்துளு ஓயாச்சந்தியிலிருந்து வடமேற்காக 4 மைல் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் உடப்பு கிராமம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 4000 தமிழ் குடும்பங்கள் இவ்வூரில் வாழ்கின்றன. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள்.  இவ்வூரின் தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும் . கிழக்கே ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்காலும் , வடக்கே இவ்வூரார் வாழும் ஆண்டிமுனைக் கிராமமும் , மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படும். கொழும்பையும் புத்தளத்தையும்  இணைக்கும் நீர்பாதையாக ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. முற்காலத்தில் சரியான பாதைபோக்குவரத்து இல்லாத காரணத்தால் இவ்வாய்க்கால் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஆண்டிமுனையில், கடற்கரையோரத்துக்கு அன்மையில் நன்னீர் ஊற்றுகளும் குளிக்கும் கிணறுகளுமுண்டு. இவ்வூருக்கு அண்மையில் உள்ள பத்துளு ஓயாவென்ற ஆற்றின் முனையில் உள்ள மண்ணை நீக்க உடைப்பு ஏற்படுத்தி  ஆற்றின் வெள்ள நீர் கடலுக்குபாச்சுவதன் மூலம் புத்தளம் முதல் ஆனைவிழுந்தாவ பிரதேசங்கள் வரையுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்படகின்றன. ஆற்றின் முனையில் உள்ள உடைப்பே பின் மருவி உடப்பாகியதென்பது பலர் கருத்து.

பழந் தமிழரின் தொன்மையான கலைகளுள் வில்லுப்பாட்டு. இந்தக் கிராம மக்களின் பிரதான  இசைக் கலைகளில் ஓன்று  வில்லைப் பிரதான இசைக் கருவியாகவும்,உடுக்கை, குடம், தாளம், கட்டைஹார்மோனியம்  போன்றவற்றைத் துணைக் கருவிகளாகவும் கொண்டு இசைக்கப்படுவது வில்லுப்பாட்டு. அதோடு அக்கிராம பெண்கள் நாட்டுப் பாடல்கள் பாடுவதில்  சிறந்தவர்கள்.      பொதுவாகப் புராண இதிகாசக்  கதைகளும்  கட்டபொம்மன் கதை, காந்தி மகான் கதை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.கதை,பாரதி கதைகளும் வில்லுப் பாட்டாகப் பாடப் படுவதுண்டு. தெம்மாங்கு முதலான நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களும் கூத்துப்  பாடல் மெட்டுக்களும் வில்லிசையிற் கையாளவதில் பெரியதம்பி  சோமஸ்கந்தர் உடப்பு கிராமத்தில்  புகழ் பெற்றவர். அவருக்கு ஆசான்  அவருடைய தந்தை  பெரியதம்பி.  கந்தர் என்று ஊர் வாசிகலாள் அழைக்கபடும் சோமஸ்கந்தர் அரச சேவையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950  இல் ஆசிரிய நியமனம் பெற்று  கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட கோவில்களில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார் வில்லிசையின் ஊடாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கந்தர் கண்டிருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும். வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத் தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச் உடப்பு சோமாஸ்கந்தரை இனங்காட்டலாம்.
கந்தரின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் எண்ணிலடங்காதவை., வில்லிசை மன்னன், வில்லிசைப் புலவர், இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் அரசின் கலாபூஷண விருதையும். வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சோமாஸ்கந்தரின் வாரிசுகளில் மூத்த மகன்  சிவா என்ற சிவஸ்கந்தர்  உடப்புக்கு தேற்கே உள்ள சிலாபத்தில் அமைந்த செயின்ட் மேரி கத்தோலிக்க கல்லூரியில் படித்தபடியால் பல சிங்கள மாணவர்களின், நட்பு சிவாவுக்கு  கிட்டியது. இந்துமதத்தைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்த சிலாபம் காலப்போக்கில், மதமும் மொழியும் மாறி, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாறியது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த பாரத யுத்தத்தில் தோல்வியுற்ற கௌரவர்கள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வங்காளம், இலங்கை ஆகிய இடங்களுக்கும் அகதிகளாய் குடிபெயர்ந்தனர்.  கௌரவர்களைக் “கரவர் “என இலங்கையில் அழைப்பர் கௌரவர்களிடையே குருகுலசூரியர், வர்ணகுலசூரியர் , அரசகுலசூரியர் ஆகிய மூன்று சூரிய குலங்களுண்டு. இன்றும்; நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரை வாழும் மக்களிடையே இப்பெயர்கள் நிலவுகிறது. போர்துகேயர் ஆட்சி காலத்தில் மதம் மாறிய சிலாப ஊர் மக்கள் பைலா நடனமும் இசையும் . கற்றனர். அவர்களிடம் சிவா பைலா நடனமும்  இசையையும் கற்றான்  அந்த இசை வில்லுப்பாட்டு இசையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தந்தையின் மறைவுக்கு பின் சிவாவுக்கு  வில்லுப்பாட்டு இசையை  சொல்லிக் கொடுக்கக் தந்தைஇல்லை. சிவாவுக்கு வில்லு பாட்டின் மேல் இருந்த ஓரளவு பற்று போய்  போர்த்துகீச பைலா இசையில்  ஈடுபாடு அதிகரித்தது. சிங்கள் நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினான். பல்கலைகழகத்தில்  படிக்கும் போது சிங்கள மாணவர்களோடு  சேர்ந்து சிங்கள் பாடல்கள் பாடினான் . அவனுக்கு வில்லுப்பாட்டில் இருந்த ஆர்வம் மறையத் தொடங்கியது.. மரபுவழிவந்த தமிழ் கிராம  இசையை மறந்தான்.  கணனி மென் பொருள்  .பொறியயல் துறையில் பட்டம் பெற்று வேலை கிடைத்து அமெரிக்கா போக வேண்டிய சந்தர்ப்பம் சிவாவுக்கு கிட்டியது .

அமெரிக்காவில் காலம்  சென்ற பிரபல பாடகர்  எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி (Elvis Aaron Presley – பிறந்த மிஸ்ஸிஸிப்பி மாநிலத்துக்கு வேலை செய்ய வேண்டிய சூல்நிலை சிவாவுக்கு ஏற்பட்டது. எல்விஸ் பிரெஸ்லி  ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும்,  நடிகரும்  ஆவார். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், “ராக் அண்ட் ரோல் இசையின் மன்னன்” எனப் போற்றப்பட்டார்.  இவர்  ஒரு  பாடகர், நடிகர், இசைவாணர். வாய்ப்பாட்டு,  கிட்டார்,  பியானோ வில் பிரபல்யமானவ்ர். சினிமாவில் நடித்து பெரும் பணக்காரரானார். போதை மருந்துக்கு  அடிமையாகி சடுதியாக இறந்தார். பொப் இசை சிவாவுக்கு பிடித்துக் கொண்டது  அதோடு  அவன் ஜாக்சன்  நகரத்தில் வேலை  செய்த பொது இசையில் ஆர்வம் உள்ள சிவா, அவனோடு வேலை செய்த அவ்வூர் அமெரிக்க பெண்மணி மேரியின் நட்பு கிடைத்தது. சிவாவுக்கு க இசை மேல் இருந்த ஆர்வம், மேரியின் உதவியோடு பொப், ராக் அண்ட் ரோல்  இசைகளும்  கிட்டார், பியானோ கருவிகளை கற்றார்    தமிழ் கிராமத்து இசையில்  இருந்து மாறுபட்ட இசை. சிவா தான் பிறந்த மாவாசனை  வீசும்  வில்லுப் பாட்டை மறந்தார். ஆதோடு  தொடர்பு உள்ள துணைக் கருவிகலான ,உடுக்கை, குடம், தாளம், கட்டை போன்றவற்றைத் மறந்தார் ஆடம்பர உணவு வகைகளை அதிகமாக விரும்பி உண்ணக்கூடியவராகவும், வறுத்த கோழித் துண்டுகள் ரொட்டி மற்றும் குழம்பு உள்ளிட்ட தென் அமெரிக்க பாணி உணவு வகைகளை அதிகம் உட்கொள்பவராகவும் இருந்தார. சாண்ட்விச்சுகளை அதிகம் விரும்பினார். அவர் வாழ்ந்த  காலச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டது. மறைத்த தன் பெற்றோரின் மரண வீட்டுக்கு கூட சிவா போகவில்லை. இதை அறிந்த உடப்பு ஊர்வாசிகள்  அவர் மேல் வெறுப்பு அடைந்தனர் .

சிவா மேரி தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகனாய் பரமேஷ் பிறந்தான். அவனுக்கு சிறு வயது முதல் கொண்டே தந்தை. பாட்டன் , பூட்டணை  போல் இசையில் ஆர்வம். பல நாட்டு இசைகளில்  பாவிக்கும் இசைக் கருவிகளை பற்றி ஆராச்சி செய்தான். அவன் படித்த பல்கலைகழகத்தில் இலங்கை மட்டகளப்பில் இருந்து வந்த மாணவன் ஒருவன் சுவாமி விபுலானந்தர் ஆராச்சி செய்து எழுதிய  பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ்ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி “யாழ்” நூல்பற்றி அந்த  மாணவன் பரமேசுக்கு  சொன்னான். அதைக் கேள்வி பட்டதும் பரமேஷ் தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் போய் அந்த  நாட்டில் பாவிக்கும் இசை கருவிகள் பற்றி ஆராச்சி  செய்ய முடிவு செய்தான். சிவாவுக்கு  தன மகன் இலங்கைக்குப் போவது அவ்வளவுக்கு விரும்பவில்லை. காரணம் எங்கே தன மகன் உடப்புக்கு போய் தன்னை ஒதுக்கி வைத்த ஊர்வாசிகளை சந்திப்பதை சிவா வேறுத்தான். பரமேஷின்  தாய் மேரிக்கு தன்’ மகன் இசையில் ஆராச்சி செய்து  முனைவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அததற்கு வேண்டிய நிதி உதவியை அவள் செய்தாள் தமிழ் நாட்டுக்கு பரமேஷ்  சென்ற  போது . இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் இசையும் கூத்தும் செவ்விய கலைகளாக விளங்கின என அறிந்தான். அகத்திய முனிவரின்  இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் செய்த சேவையை அறிந்தான்  .  சங்க காலத்தில்   யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம்முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன என்பதை  கேட்டறிந்த பொது அவனல் நம்ப முடியவில்லை . சங்க காலத்தில்  சிகண்டி என்னும் முனிவர் இசை நுணுக்கம் என்ற நூலை எழுதியதாக ஒரு தமிழ் புலவர் சொன்னார். வீணை, புல்லாங்குழல், . யாழ். மிருதங்கம். நாதஸ்வரம், மேளம்   பறை  அவனுக்கு மிகவும் பிடித்த கருவிகள்   அவனுக்கு கிராமிய  தேம்மாங்கு பாடல்களில் மேல் ஆர்வம் ஏற்பட்டது . ஒரு காலத்தில் தமிழ் சினிமா இசை அமைப்பாளராக  இருந்த   இசைவண்ணனின் அறிமுகம்  பரமேசுக்கு கிடைத்தது . அவர் இயற்கைக்கும் இசைக்கும்  உள்ள தொடர்பையும் வில்லுப்பாட்டு. கிராமீய பாடல்கள்  பற்றி பேசிய பொது பல தசாப்தங்களுக்கு முன் ஆடி  வேல் திருவிழாவுக்கு  வில்லுப்பாட்டு பாட கொழும்பு தான் தன் குழுவோடு  சென்றதாகவும் அப்போது சோமஸ்கந்தர் என்பவரின் வில்லுப்பாட்டை கேட்டு தான் மெய் மறந்து போனதாக சொன்னார். சோமஸ்கந்தர் பல விருதுகள் வாங்கியவர் என்று  சொன்னார். அவரின்  அழைப்பின்   பேரில் உடப்பு என்ற மீனவர்கள்  கிராமத்துக்கு தான் சென்றதாகவும் அங்கு தான் சோமஸ்கந்தரின் வில்லுபாட்டையும்   அக்கிராம பெண்களின் நாட்டுப் பாடல்களையும், மீனவர்கள் கரை வலை இழுக்கும் போது சோர்வு நீங்க பாடும் அம்பா பாடலையும்  பதிவு செய்த கொண்டு வந்ததாக சொல்லி பாடல்களை போட்டு காட்டினர்    அவர்  பேசும் பொது உடப்பூர்  மக்களின் இசை திறமையை   பாரட்டிப் பேசினார் பேசினார். இசைவண்ணனை  சந்தித்து வில்லுபாட்டின் பிரதியோடு  ஹோட்டலுக்கு திரும்பியவுடன்  பரமேஷ் முதலில் செய்த வேலை தன் தாய் மேரிக்கு போன். செய்து அந்த  இசையை போட்டு காட்டினான்.

பாடலைக் கேட்டு  முடிந்ததும் தாயின் சிரிப்பொலி கேட்டது

“ஏன் அம்மா சிரிகிறீர்கள் “ பரமேஷ் கேட்டான் 

“அது ஒரு காலத்தில் பிரபல வில்லுப்பாட்டில் பிரபல்யமாக இருந்த   உன் பாட்டனார்  சோமாஸ்கந்தரின் குரல்.  அவரை பற்றி உனக்கு உன் அப்பா ஒரு போதும் சொன்னதில்லை”

“ ஏன் அம்மா அப்பா அப்படி செய்தார்”?

“உன் அப்பா  வில்லுப்பாட்டை மறந்து, பிற  மொழி இசையை கற்றது உன் பாட்டனாருக்கும்,  உடபூர் வாசிகளுக்கும்  பிடிக்காததால் அவரை  புறக்கணித்து விட்டனர்”.என்றாள் மேரி

“ அம்மா நான் என் பூர்வீக கிராமத்துக்கு போய் அக்கிராமத்து இசை பற்றி இரு மணி ஆவணப்  படம் ஓன்று எடுத்து உலகுக்கு தமிழனின் வில்லுப்பாட்டின் பெருமையையும், கிராமீய பாடல்கள  தேன் பாங்காகத்  திகழும் தெம்மாங்கு பாடல்கள், கிராம பெண்களின் கும்மி . கரகாட்டம், பொய்கால் குதிரை  ஆட்டம், ,புலி ஆட்டம் ஆகியவற்றை பற்றியும்  அவர்கள் பாவிக்கும் இசை கருவிகள் பற்றிய வரலாற்றினை ஆவணத்தில்,  ஆங்கில துணை தலைப்போடு  தமிழனின் கலைப் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டப் போறன். அப்போ தான் என் பாட்டனர் ஆன்மா சாந்தி பெறும்  ” பரமேஷ் மேரிக்கு உணர்ச்சியோடு சொன்னான்.

“உன் பாட்டனாரைப்    போல் இலங்கையில்  வேறு வில்லு பாட்டுக்காரர்கள்   இருக்கிறார்களா”?

“ஏன் இல்லை அம்மா?. லடிஸ் வீரமணி சின்னமணி, நாச்சிமார்கோயிலடி இராஜன் போன்றோர் இருந்தார்கள் என் கேள்வி பட்டேன்”

“ அது சரி உன் ஆவணப்  படத்துக்கு என்ன பெயர் வைக்க உத்தேசம் பரமேஷ்”

“ கிராமத்து வில்லிசை”

“ பொருத்தமான பெயர் பரமேஷ். உன் திட்டம் வெற்றி பெற என் வாழத்துக்கள். அந்த ஆவணத்தை  யூடியூபிலும் (YouTube) , தேசீய புவியியல் (National Geographic), அமெரிக்கா கனடா. அவுஸ்திரேலியா  ஐரோப்பாவில் உள்ள பிரபல தொலை காட்சிகளில் ஒளிபரப்ப என்னால் முடிந்ததை செய்கிறேன். உனது ஹவார்ட் பலகலைகழக தமிழ் துறை பேராசிரியரை எனக்குத் தெரியும். அவருக்கு உன் திட்டத்தை பற்றி.  சொல்கிறேன். நீயும் அவருக்கு ஒரு அறிக்கை அனுப்பு. . அவர் மிகவும்  சந்தோசப்படுவார் . சில நேரம் ஹவார்ட் பலகலைக்கழகம் உனக்கு நிதி உதவி கூட செய்யலாம்” என்றாள் மேரி

(யாவும் கற்பனையும் உண்மையும் கலந்தது)

kulendiren2509@gmail.com