சுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது

சுப்ரபாரதிமணியன்திருப்பூர்  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை  கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது (கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும், மலையாள எழுத்தாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் தமிழ் பிரிவிற்கான விருது சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் மினிமேன்னுக்கும். அவ்விழாவில் முன்னாள் கேரளா கலாச்சார அமைச்சர்  பேபி, மலையாளத் திரைப்பட நடிகை கிருபா, திரைப்பட நடிகர் மேகநாதன், பாலக்காடு எம்.பி. ராஜேஸ், கோவை எம்.பி. நடராஜன், கேரள சாகித்ய அகாதமி செயலாளர்  கவிஞர் ராமுன்னி, விஜயகுமார் குனிச்சேரி, ஸ்டான்லி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.எழுத்தாளர்களும்  வாசகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. 09486101003

subrabharathi@gmail.com