சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது யமுனா ராஜேந்திரனின் ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது யமுனா ராஜேந்திரனின் ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்யமுனா ராஜேந்திரன்ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரைத்திய தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது. தமிழகம்  புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.

கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் உடன்பயணியாக நான் இருந்திருக்கிறேன். அரை நூற்றாண்டு கால தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள், மார்க்சியர்களின் சோசலிச அரசியல் அனுபவங்கள், வேறுபட்ட உலக அரசியல் போக்குகள் ஆகிய சூழலுக்குள் நின்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும்
அனுபவங்களையும் புரிந்துகொள்கின்ற, ஆவண மதிப்பும், கருத்தியல் மதிப்பும், எதிர்கால அரசியல் விவாத மதிப்பும் கொண்ட ஒரு நூலைக் கொணர்வதுதான் எனது நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை நான் எய்தியிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.

ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை ‘வரலாற்றில் வைத்துப்’ பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் ‘வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்’ நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன். தொகுப்பின் கணிசமான கட்டுரைகள் குளோபல் தமிழ் நியூஸ், கீற்று, உயிரோசை, தேசம்நெட், பொங்குதமிழ் இணையதளங்களிலும் உயிர்மை மாத இதழிலும் வெளியானவை. நான் எழுத நேர்ந்த எல்லா இடங்களிலும் தங்குதடையற்ற எழுத்துச் சுதந்திரத்தை எனக்கு வழங்கிய ஊடக நண்பர்கள் நடராஜா குருபரன், மனுஷ்யபுத்திரன், கீற்று ரமேஷ், ஜெயபாலன், சிவப்பிரகாசம் சிவரஞ்ஜித் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகக் கடினமான பணியான ‘சுட்டிகள்’ பகுதியைக் கவனமெடுத்துச் செய்தவன் எனது அன்பு நண்பனான கலாநிதி எஸ்.வி. உதயகுமார். நிஜத்தில் அவனுக்கு நான் சொல்லும் நன்றிக்குரிய எல்லா வார்த்தை களும் அர்த்தமிழந்தவை; அவனுக்கான எனது கனிவான ஆரத்தழுவு தலும் முத்தமும்தான் அதனை ஈடுசெய்யும். எம்.எப். ஹுஸைன் குறித்த தனது புத்தக வேலைகளின் இடையிலும், நான் கேட்டுக்கொண்டதற் கிணங்க இந்த நூலின் அட்டைப்படத்திற்கென அல்பான்சோ கெனோ மற்றும் பிரபாகரன் ஆகியோரின் சித்திரங்களை வரைந்து கொடுத்த எனது நண்பர் ஓவியர் புகழேந்திக்கு எனது மனம் கனிந்த நன்றி. தொகுப்பைத் திருத்தமாகவும் அழகாகவும் கொணரும் அடையாளம் பதிப்புக்குழுவினருக்கும், கட்டுரைகள் வெளியான வேளைகளில் உடனுக்குடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட எனது அன்பு நண்பர்கள் அசோக் யோகன், மு. புஷ்பராஜன் ஆகியோருக்கும் எனது மனமுவந்த நன்றி உரித்தாகிறது.

 725 பக்கங்கள்; 550 இந்திய ரூபாய்கள்

அடையாளம்
1205/1 கருப்பூர் சாலை
புத்தாநத்தம் 621310
திருச்சி மாவட்டம்
இந்தியா
தொலைபேசி : 04332 273444

36th Chennai Book Fair
11:01:2013 to 23:01:2013

YMCA Physical Education College Ground
Nandanam
Chennai – 600035
Tamilnadu, India

Adaiyaalam Stalls at 355 and 356

பொருளடக்கம்

முன்னுரை: I to XXVIII
விமர்சன-சுயவிமர்சன மரபும் ஈழ விடுதலைப்
போராட்டமும்
சர்வதேசச் சூழல் 1

1 எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் 3
2 தேசியம் பாசிசம் சோசலிசம் 23
3 அல்பான்ஸோ கெனோவும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் 45

விடுதலைப் போராட்ட அனுபவங்கள் 63

4 இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களும் விடுதலைப் புலிகளும் 65
5 மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்: வியட்நாம்
மற்றும் பொலிவிய அனுபவங்கள் 79
6 போராளிகளும் வெகுமக்களும் 94
7 கொடுந்துயரின் மீதான நிழல்கள் 106

சாதியமும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையும் 119

8 விடுதலைப் புலிகளின் சாதி 121
9 இலங்கை அரசியல் இஸ்லாம் 144

இலங்கை இந்திய மார்க்சிஸ்ட்டுகள் 167

10 இந்திய-இலங்கை இடதுசாரிகளும் வல்லுநர் குழு அறிக்கையும் 169
11 எஸ்.வி.ராஜதுரையின் சர்வ-தேசியம் 196
12 வாசுதேவ நாணயக்கார: இனவாதியின் சித்திரமொன்றை
எவ்வாறு வரைவது? 223
13 தயான் ஜயதிலகவின் அறம் 233
14 தயான் ஜயதிலகவின் மறுவருகை 241

மாற்றுக் கருத்து அரசியல் 247

15 அரசும் புலிகளும்: எங்கிருந்து தொடங்குவது? 249
16 பாலையும் வாழையும்: பின்நவீனத்துவ அடையாளம் – மாற்று
அரசியல் – மனித உரிமை 260
17 இணக்க அரசியல் – சரணாகதி அரசியல் – இடதுசாரி அரசியல் 268
18 அ.மார்க்ஸ்: அறத்திற்கு மாற்று அரசியல் சந்தர்ப்பவாதம் 276
19 அரசுசாரா நிறுவன அரசியல் 288
20 கிராம்ஸி  – அரசு  – சிவில் சமூகம் 296

இலக்கியவாதிகள் 301

21 எல்லாமும் பக்கத்து அறையில்தான் நடக்கிறது 303
22 இலக்கியவாதி – அரசியல்வாதி – அறிவுஜீவி 331
23 சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு 348

இலங்கை அறிவுஜீவிகள் 367

24 ரஜீவ விஜேசிங்க: மகிந்த ராஜபக்சேவின் இலக்கிய முகம் 369
25 ரோஹன் குணரத்ன: காகிதச் சிங்கம் 374
26 பின் லாடன் – பிரபாகரன்: ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் 383
27 முரளீதரன்: கிரிக்கெட் வீரனின் தேசபக்தி 388
28 மர்வின் சில்வா: டிராகுலாவின் முத்தம் 396

மனித உரிமை விவாதம் 401

29 மகிந்தரின் அந்தரங்க முகம் 403
30 ஏகாதிபத்தியம் – தேசிய விடுதலைப் போராட்டம் – மனித உரிமை 411
31 மன்னிக்கலாம், மறக்க முடியாது 418
32 காலனியமயமாக்கலும் மீள்குடியேற்றமும் 427
33 மரணதண்டனை ஒழிப்பு: அறமும் அரசியலும் 434

தமிழகத் தமிழ்த் தேசியம் 455

34 விடுதலைச் சிறுத்தைகளின் சதுரங்க அரசியல் 457
35 ஒற்றுமை குறித்த ஆற்றாமை 464
36 இந்தியாவின் மீதான நம்பிக்கை அல்ல, தமிழகத்தின் மீதான
நம்பிக்கை 474
37 தேசியமும் இனவெறி அரசியலும்: தமிழகத் தமிழ்த் தேசியம் குறித்து 486
38 நாம் தமிழர் கட்சியின் பாசிச தேசியம் 493

ஆவணப்படங்கள் 501

39 இலங்கையின் கொலைக்களம்: சாட்சிகளற்ற போர் குறித்த
மூன்று ஆவணப்படங்கள் 503
40 இலங்கையின் கொலைக்களம்: ராஜபக்சேக்களின் ஆபாச நடனம் 517
41 ஒப்புக்கொள்ளக் கோரப்படும் பொய்கள்: கோத்தபயாவின்
ஆவணப்படம் 523
42 பிரியம்வதாவின் இனக்கொலை சாட்சியம்: ஹெட்லைன்ஸ் டுடே
ஆவணப்படம் 529
43 காட்டுமிராண்டிகளின் காலம்: மிகுயா சௌத்ரியின் கோபம் 534
44 இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் 541

மூன்று அறிக்கைகள் 565

45 ஐநா வல்லுநர் குழு அறிக்கை: எமக்கெனத் திறந்திருக்கும்
அரசியல் வெளி 567
46 நோர்வே ஆய்வு அறிக்கை: இனக்கொலையின் பின் இந்தியக் கைகள் 582
47 இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை: கொலையாளி
களிடம் கையளிக்கப்பட்டிருக்கும் பிறிதொரு கொலைவாள் 598

பின்முள்ளிவாய்க்கால் யதார்த்தம் 613

48 அரசியல் என்பது ஆயுதமற்ற போர் 615
49 22 மார்ச் 2012 ஐநா மனித உரிமைச் சபைத் தீர்மானம்: இதனை
எவ்வாறு புரிந்துகொள்வது? 628
50 பிடல் காஸ்ட்ரோவும் மகிந்த ராஜபக்சேவும் 635
51 தமிழர் அரசியலின் சாபம் 638
52 ஏன் நாம் அரசைப் பற்றி அதிகம் பேசுகிறோம்? 643
53 தமிழ் சமூகத்தை ஜனநாயகப்படுத்துதல் 653
54 பிரபாகரனின் மரண பிம்பம்: நிஜங்களின் பாலைநிலம் 659

குறிப்புகளும் உசாத்துணைகளும் 673

சுட்டி 679 to 692

rajrosa@gmail.com