சேலத்தில் தமிழ் ஸ்டுடியோ – தொடர் திரையிடல்..

சேலத்தில் தமிழ் ஸ்டுடியோ - தொடர் திரையிடல்..நண்பர்களே எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சேலத்தில் உள்ள ARRS மல்டிப்ளெக்ஸ் ஹாலில் தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் தொடங்கப்படவிருக்கிறது. தமிழின் முதல் குறும்படமான நாக்-அவுட்டும், இந்தியாவில் முதல் தலித்தியல் திரைப்படமான ஃபன்றியும் திரையிடப்படவிருக்கிறது. படத்தொகுப்பாளர் பீ. லெனின் இந்த மாதாந்திர திரையிடலை தொடங்கி வைக்கிறார். சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்கள் தவறாமல் இந்த மாதாந்திர திரையிடல் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் உள்ள நண்பர் மணிகண்டனின் தீவிர முயற்சியின் காரணமாகவே, சேலத்தில் தமிழ் ஸ்டுடியோவின் திரையிடல் தொடங்கப்படுகிறது. மணிகண்டனுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி சேலத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலக திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொள்ளவும். இதன் தொடர்ச்சியாக சேலத்தில் பல்வேறு பயிலரங்குகளும் நடத்தப்படவிருக்கிறது.

 

முன்னமே புதுவையில் தமிழ் ஸ்டுடியோ மாதாந்திர திரையிடல் நடந்துக்கொண்டிருக்கிறது. இப்போது சேலத்தில் தொடங்கப்படவிருக்கிறது. மற்ற மாட்டங்களிலும் தொடங்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com