ஜீவா நாராயணன் (கடலூர்) கவிதைகள்

கவிதை வாசிப்போமா?


1. கண்ணீரும் கலக்கட்டும்விடு

விடு  விடு
நீரை  திறந்துவிடு  – அது 
உங்கள்  காவேரியே  ஆனாலும்
அணைகளில்  இருந்து  திறந்துவிடு

மகிழ்ச்சியில்  கரை 
புரண்டோடவிடு
எங்கள்  மண்ணை 
தழுவவிடு
ஆனந்த  கண்ணீரை 
சிந்தவிடு

எங்கள்  பயிரும் 
செழிக்கட்டும்விடு
எங்கள்  உள்ளமும் 
குளிரட்டும்விடு

எங்கள்  வயலுக்கு 
தாய்ப்பால்  கொடு
எங்கள்  விவசாயிக்கு 
உயிரை  கொடு

சுயநல  எல்லைகள் 
உடைத்துவிடு
மனிதநேய  எல்லைகள் 
பரவவிடு

விடு  விடு
நீரை  திறந்துவிட்டு
எங்கள்  கண்ணீரும்   – அதில்
கலக்கட்டும்  விடு


கவிதை வாசிப்போமா?

2. துடிப்போடதாண்ட  பாயும்

அழுத்துப்  புரண்ட  நாடு
இப்ப எழுந்து நிக்கப்போது
எதிர்த்து நின்ற தலைவர்களெல்லாம் 
இனி  தெருவில் நிற்கத்தாண்டபோது

உறங்கி  கிடந்த   விழிகள்
இன்று  விடியல்  காணப்போது 
இனி  எதிரி  கூட்டமெல்லாம்
உறக்கம்  இழக்க  போது

இழக்க இழக்க தானே
எல்லாம் இழந்து நின்னாச்சி
அட கோமணத்தையும் தாண்ட
தலைநகரில் இழக்க வேண்டியதாச்சி

உழுது புரண்ட தேகம்
இன்று அழுது புலம்பலாச்சி
கண்ணீர்  புரண்டு ஓடி 
மண்ணும்  கண்ணும்   வறட்சியாகிப்போச்சி

மலையை தாண்ட உடைச்சி
என் முப்பாட்டன்  மண்ணாக்கினாண்டா
அந்த  மண்ணை  உழுதுதானாடா
என்  பட்டன் வளமாக்கினாண்ட 

அந்த வளமான காட்டை
எங்க  அப்பன் காப்பதினாண்ட
அதை களவாட நியும்வந்த
உன் கைகால்கள் இடம்மாறிப்போகும்

இது எங்கள் பிடிவாதமாகும்
நாங்க  உலகையாண்ட  ராஜராஜன்  இரத்தம்
கொஞ்சம் துடிப்போடதாண்ட  பாயும் 

மின்னஞ்சல் – jeevanarayanant@gmail.com