ஞானமே!!!

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -

“ஞானநிலையோடே
அது சிரிக்கின்றது…
பிரிப்படாத
வண்ணங்களில்
புழுதியேறி
அகலத்திறந்த
அதன் வாய்க்குள்
சில கொசுக்களும்
ஈக்களும்
ரீங்காரத்தோடு……
ஈக்கியாய்
உலரும்
பொட்டல்
வெயிலிலும்
அதன் சிரிப்பில்
சிறிதும்
மாற்றமில்லை…

கருத்த அதன்
உடல் வாகில்
ஆங்காங்கே
சில கீறல்கள்…
அதன் நகை வலுக்க
நகர்கிறேன்
அது மேலுமொரு
கீறலை
ஏற்றுக்கொண்டு
என்நினைவில்
எதையோ
வனைந்துக்
கொண்டிருக்கிறது…
குப்பைக் குழியில்
தூக்கி எறியப்பட்ட
தானியச்  சட்டியொன்று..?”