தணியாத தாகம் – எதிர்வினை

Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Sat., Apr. 25 at 6:21 p.m.


நண்பர் கிரிதரனுக்கு காலை வணக்கம்.  அந்தச்சகோதரிகள் எனது ஆசான்கள் சுப்பிரமணியம் தம்பதியரின் புதல்விகளா!  வாழ்க. கலைஞர் இ.சி. சோதிநாதனும் சுப்பிரமணியம் தம்பதியர் பணியாற்றிய எங்கள் விஜயரத்தினம் கல்லூரியில் (விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில்) அதிபராக பணியாற்றியவர்தான்.  சோதிநாதனும் கனடாவில் மறைந்தார்.  தணியாத தாகம் மிகச்சிறந்த வானொலி நாடகம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எனினும்  அந்தத்  தணியாத தாகம் கதை ஏன் வானொலி நாடகமானது – ஏன் அந்தச்சுவடி நூலாக வெளியானது என்பதற்கும் ஒரு பின்னணி கதை இருக்கிறது.. அந்த திரைப்படச் சுவடியை படித்த கவியரசு கண்ணதாசனும்  விதந்து   பாராட்டினார்.  அதன் பிறகே தமிழகத்தில் திரைப்படச்சுவடிகளை எழுதும் மரபு தோன்றியது.  ( முன்னர் சினிமாப்படத்தின் கதைச்சுருக்கத்துடன்  பாடல் பிரசுரங்கள்தான் வெளியாகின. )   ஜெயகாந்தனும் தனது சிலநேரங்களில்  சில மனிதர்கள் நாவலையும் திரைப்படச்சுவடியாக எழுதினார். அந்தச்சுவடியை ஒரு கையேடாக வைத்துக்கொண்டுதான்  இயக்குநர் ஏ. பிம்சிங் அந்தப்படத்தை  எடுத்தார்.  வெற்றி பெற்றது. லட்சுமிக்கு தேசிய விருதும் கிடைத்தது.  எனவே சில்லையூரின் சுவடி படமாகியிருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். கோமாளிகள் கும்மாளம் – தொடர் நாடகம்  – கோமாளிகள் திரைப்படமாக வெற்றி பெற்றது. சில்லையூர் தனது கதைக்கு நேர்ந்த திருட்டுக்குறித்து  (  ஒருவர் அக்கதையை வைத்து ஒரு திரைப்படம் எடுத்துவிட்டார் என்ற கோபம் )  இறுதி   வரையில் கோபத்துடன்தான் இருந்தார்.

அன்புடன்
முருகபூபதி