தமிழகச் செய்திகள் (பிபிசி.காம்): தமிழகத்தில் ஜெயலலிதாவின் அதிமுக அமோகம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ இஅதிமுக பத்து மாநகராட்சிகளையும், 89 நகராட்சிகளையும், 287 பேரூராட்சிகளையும் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. திமுகசென்னையில் கடந்த 5 ஆண்டு காலம் மேயராகப் பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த மா சுப்பிரமணியன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ இஅதிமுகவின் சைதை துரைசாமியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, திமுக, அதிமுக அதேபோல திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் தளமான மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திலும் அ இஅதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

தனித்துப் போட்டியிட்ட திமுக 23 நகராட்சிகளிலும் 121 பேரூராட்சிகளிலும் வென்றிருக்கிறது.

காங்கிரஸ்காங்கிரஸ் கட்சி தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது.

பேரூராட்சித் தலைவர் பதவியை 24 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டும் 5 இடங்களில் வென்ற காங்கிரஸ், தனித்துப் போட்டியிட்டு ஒரு நகராட்சியைக் கூட வெல்லமுடியவில்லை. இன்னும் இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இப்போதைய முடிவுகள் அதற்குப் பெரும் பின்னடைவாகியுள்ளது.

பாரதீய ஜனதா மேட்டுப்பாளையம், மற்றும் நாகர்கோவில் நகராட்சித் தலைவர் பதவிகளை வென்றிருக்கிறது, பேரூராட்சிகள் 13லும் அந்தக் கட்சி வென்றிருக்கிறது.

சிறிய கட்சிகள்
மதிமுக தலைவர் வைகோ கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த மதிமுகவிற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலகள் சற்று நம்பிக்கை அளிப்பதாயிருக்கிறது. குளித்தலை நகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறது, தூத்துக்குடியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, மற்றும் சில பேரூராட்சித் தலைவர் பதவிகளையும் அது வென்றிருக்கிறது.

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பெரும் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருக்கிறது. பல்லடம் மற்றும் கூடலூர் நகராட்சிகளை அது கைப்பற்றியிருந்தாலும் மற்ற உள்ளாட்சிகளில் மிகக்குறைவான இடங்களிலேயே அது வெற்றி பெறமுடிந்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியும் வட் மாவட்டங்களில், வன்னியர் பகுதிகளில் கூட தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆனால் 60 நகராட்சி மன்ற உறுப்பினர்கள், 2 பேரூராட்சி தலைவர்கள், 108 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு இடங்களை தன் கட்சி வென்றிருப்பதாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/10/111022_localbodyresults.shtml