தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா): தாயகத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு சமாந்தரமாக புலத்திலும் போராட்டம் மேற்கொள்ளப் படும்

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு கடந்த யூன் 16, 2012 அன்று ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது.  முக்கியமாக மூன்று தலைப்புகளில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.  (1)  தாயகத்தில்   போரினால் இடப் பெயர்வுக்கு உள்ளாகி மக்களது பொருண்மிய வாழ்வாதாரச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் (2) தமிழர்களின் அரசியல் எதிர்காலம் (3)  ஊடகங்கள் வகிக்கும் பாத்திரமும் பங்களிப்பும் ஆகியவையே அந்தத் தலைப்புகளாகும்.தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு கடந்த யூன் 16, 2012 அன்று ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது.  முக்கியமாக மூன்று தலைப்புகளில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.  (1)  தாயகத்தில்   போரினால் இடப் பெயர்வுக்கு உள்ளாகி மக்களது பொருண்மிய வாழ்வாதாரச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் (2) தமிழர்களின் அரசியல் எதிர்காலம் (3)  ஊடகங்கள் வகிக்கும் பாத்திரமும் பங்களிப்பும் ஆகியவையே அந்தத் தலைப்புகளாகும். அரசியல் கைதிகளின் விடுதலை,  சிங்களக்  குடியேற்றம்,  சிங்கள இராணுவத்தால் நில அபகரிப்பு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்,  தாயகத்தில் இடம்பெறும் பண்பாட்டுச் சிதைவு ஆகியவை பற்றியும் ஆராயப்பட்டன. அஞ்சப்பர் உணவகத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் 25 பேர் கலந்து கொண்டார்கள்.  ததேகூ (கனடா) தலைவர் வே. தங்கவேலு தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் வேறு அமைப்புக்களை சார்ந்த செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு சமாந்தரமாக புலத்திலும் ஆர்ப்பட்டங்களை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு ரொறன்ரோ மாநகரத்தில் உள்ள ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களது ஒத்துழைப்பைக் கேட்பது என முடிவாகியது.

 

கனடா மறுவாழ்வு அமைப்பு வட – கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல இலட்ச உரூபா வழங்கியுள்ளது.  1985 ஆம் ஆண்டு இராணுவத்தினால் பல தமிழ் ஊர்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட  சில குடும்பங்கள் மீள அவர்களது காணிகளில் குடியேறியுள்ளார்கள். அவர்களது வாழ்வாதாரத்துக்கு வேண்டிய சுயதொழில் முயற்சிக்கு  மறுவாழ்வு அமைப்பு நிதியுதவி நல்கிவருகிறது.  பயனாளிகள் நல்லின ஆடு வளர்ப்பு,  மேட்டு நிலப்பயிர்ச் செய்கை, வீட்டுத் தோட்டம், முட்டைக் கோழி வளர்ப்பு, பலசரக்கு வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 36 குடும்பங்கள் (107 உறுப்பினர்கள்) பயனடைந்துள்ளன.  இன்னும் பல குடும்பங்கள் உதவிக்குக் காத்திருக்கின்றன.

மட்டக்களப்பில் நடந்த தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டில் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய தலைமையுரை, திரு ம.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய 121 பக்கங்கள் கொண்ட நூல் (Selected Speeches and Articles by Tamil National Alliance (TNA) ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  இதன் வெளியீடு விரைவில் இடம்பெறும். 

நண்பகல் 12.30 தொடங்கிய கலந்துரையாடல் பி.ப. 3.30 மணி வரை நீடித்தது.

ததேகூ (கனடா) இன் செயலாளர் திரு வீர விஜேந்திரா அவர்களுடைய நன்றியுரையுடன் கலந்துரையாடல் இனிது நிறைவேறியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Tamil National Alliance (Canada)
41 Windom Road Toronto ON M3C 3Z5
Phone: 416-877-8409 . email: tnacanada@rogers.com

athangav@sympatico.ca