தமிழ் நதி

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

அமைதியின் அதீத அன்பில்
மெளனித்து நிற்கும்
திசையற்ற பொழுதுகளில்
தமிழ்த்தாய் கண் முன்
பேறுவகையுடன் காட்சியளிக்கிறாள்.

காலங்களின் போராட்டச் சூழலில்
கழுத்தளவு தண்ணீரில்
எதிர் நீச்சல்
உதிக்கும் சூரியனும் வாய் பிளக்கும்
நட்சத்திரங்கள் வியந்து கண் சிமிட்டும்
பாலியின் மதத்தோடும்
வடமொழியின் வீரியத்தோடும்
போராடிய வீரத்தளும்பு
சற்று பயமுறுத்தத்தான் செய்தது
ஆங்கிலத்தின் அடிவயிற்றல்
என்றாலும்
ஓடிக்கொண்டே இருக்கிறது தமிழ் நதி
தொலைவில் ஒளி வீசும் பொய் முகத்தோடு ஹிந்தி
முகம் கிழிக்க வாளேந்தி சிவந்த கண்களுடன் தமிழ்.

காலம் சொல்லும் மெல்ல
தமிழினி வெல்லும்!

Email : ramachandran.ta@gmail.com