‘தமிழ் மிரர்’: தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாகவுள்ளது: சுஷ்மா.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின்  இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்' எனக் கூறிய அவர்,  அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். 'அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை' என அவர் கூறினார்.இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின்  இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்’ எனக் கூறிய அவர்,  அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். ‘அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை’ என அவர் கூறினார்.

இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் விஜயம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது ஓர் உல்லாச பயணம் அல்லவென நான் ஜெயலலிதாவுக்கு கூறியுள்ளேன். தினமும்  காலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை நாம் பணியாற்றினோம். நாம் எங்கும் ஷொப்பிங் போகவில்லை. கொழும்பை சுற்றிப் பார்க்கவும் இல்லை. அதற்கு எமக்கு நேரம் இருக்கவில்லை’ என்றார்.

‘தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கையின் வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியமை குறித்து கருத்து தெரிவிக்க சுஷ்மா ஸ்வராஜ் மறுப்பு தெரிவித்தார்.

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர் மாநாட்டில் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:

“இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவற்ற பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை  நேரில் பார்வையிடுவதற்காவே நாம் இவ்விஜயத்தை மேற்கொண்டோம். அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என பல தரப்பினரையும் சந்தித்து தற்போதைய நிலை தொடர்பான விபரங்களை, குறிப்பாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை அடைவதற்கான வழிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் மீளக்குடியேற்றவதற்குமான முற்சிகளுக்கும் வடக்கில் உட்கட்டமைப்புகளை மீள நிர்மாணிப்பதற்கும் ஏராளமான உதவிகளை  இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கயின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் நிலைமை மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து நேரில் பார்வையிடவும் நாம் விரும்பினோம்.

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எமது தூதுக்குழுவினரும் நானும் சந்தித்தோம். அமைச்சர்கள் பலர், எதிர்க்கட்சித் தலைவர், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோரை நாம் சந்தித்ததுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டோம்.  எனினும் 3 வருடகால ஆயுத மோதலின் அதிர்ச்சிகளிலிருந்து மீண்டும் வரும் மக்கள் என்ற வகையில் எமது முக்கிய கவனம் வழக்கு கிழக்கு பகுதியாகவே இருந்தது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம்;. எனினும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர்  இன்னும் இடைத்ததங்கள் முகாம்களிலும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்னர். அவர்கள் தமது முந்தைய வீடுகளுக்கு திரும்பும்வரை எமது இலக்கு முழுமையடைய போவதில்லை. இதேபோன்று புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. சாத்தியமான எந்த வழியிலும் நாம் பங்குடைமை, ஒத்துழைப்;பு உணர்வுடன் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம்.

ஆயுத மோதலின் முடிவானது தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த  சந்தர்ப்பத்தை அளித்தது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் போரின் காயங்களை குணப்படுத்தும் விவகாரங்கள் தொடர்பான பல சிபாரிசுகளை செய்துள்ளது. இவை அவசர உணர்வுடன் வலியுறுத்தப்படுவது முக்கியமாகும். இதுவே எமது விஜயத்தின்போது எமது இலங்கை நண்பர்களுக்கு நாம் தெரிவித்த செய்தியாகும்.

காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள், காணால் போனோர் கடத்தப்பட்டோர் குறித்த விசாரணைகள், மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தல், உயர் பாதுகாப்பு வலயங்களை குறைத்தல், தனியார் நிலங்கள் படையினரால் மீள ஒப்படைக்கப்படுதல், இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், வடமாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகள் துரிதமதாக அமுல்படுத்தப்பட  வேண்டுமென்பதை கடந்த நான்கு நாட்களாக நாம் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தெளிவாக்கின.

சிவில் நிர்வாகத்திலிருந்து பாதுகாப்புப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் சிவில் சமூக வாழ்க்கையிலிருந்து இராணுவம் வாபஸ் பெறப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்ததையும் நாம் கவனத்திற்கொண்டோம்.

இலங்கை அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சுய கௌரவம் ஆகியவற்றுக்கான நியாயமான தேவையை கருத்தற்கொண்ட அர்த்தபூர்வமான அதிகார பரவலாக்கலின் அடிப்படையில் உண்மையான அரசியல் தீர்வை காண்பதற்கான தெளிவான அணுகுமுறையை மேற்கொள்ளும் என நாம் நம்புகிறோம்.

13 ஆம் திருத்தம்  – பிளஸ் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என கடந்த காலத்தில் எமக்கு உறுதி வழங்கப்பட்டது. விரைவான அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய அனைவரையும் நாம் வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஆரம்பிப்பதற்கான சூழல் குறித்து அவசரமான கலந்துரையாடல்களை நடத்துமாறும் நாம் யோசனை கூறுகிறோம்.

எமது விஜயத்தின்போது காங்கேசன்துறை துறைமுக், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட வடக்கிலும் தெற்கிலும் எமது உதவியினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை நாம் பார்வையிட முடிந்தது. பூர்த்தியாகப்பட்ட திட்டங்கள் ஒப்படைக்கப்படுவதை பார்வையிட்டதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

எமது உறவுகள் பரந்தளவில் முன்னோக்கி நகர்வதை அவதானிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது நாகரிகம், கலாசாரம் மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையிலான உறவாகும்.

நெருக்கமானதும் நட்புறவானதுமான அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் இலங்கயின் ஐக்கியத்திலும் பிராந்திய ஒருமைப்பாட்டிலும், சமாதானத்தை பாதுகாத்தல், இந்நாட்டின் நல்லிணக்கம், சுபீட்சம் ஆகியவற்றில் நாம்  பலமான பங்கு வகிக்கின்றோம்.

இந்தியாவும் இலங்கையும் விசாலமான இடைமுகத்துடன் அருகருகேயுள்ள அயல்நாடுகள் என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய இரு தரப்பு விவகாரங்கள் உள்ளன. உதாரணமாக  மீனவர்கள் விவகாரம். இது உணர்வு பூர்வமான விடயமாகும் எனவும் இரு தரப்பினாலும் மிக கவனமாக கையாளப்பட வேண்டியதுமாகும் எனவும் நான் வலியுறுத்துகிறேன்.

இதற்கான தீர்வுகளை நாம் ஆராயும் நிலையில், மீனவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாதிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மீன்பிடி தொடர்பான கூட்டு செயற்குழு இவ்வருட ஜனவரியில் சந்தித்து பிரச்சினைகளின் தீர்வுக்கான பல்வேறு வழிகள் குறித்து ஆராய்ந்தது என்பதை அறிவதில் மகிழ்ச்சியடைகிறேன். இரு தரப்பு மீனவர்களும் மீண்டும் சந்தித்து நேரடியாக பேச முடியும் என நான் நம்புகிறேன்.

இந்தியாவும் இலங்கையும் வரலாறு, பூகோளவியல், கலாசார அடிப்படையில் பிணைந்துள்ள நாடுகளாகும். ஒன்றுடனொன்று தொடர்புள்ள தலைவிதிகளை கொண்டுள்ள நெருங்கிய அயலவர்கள், நண்பர்கள் என்ற உணர்வின் அடி;படையில் எமது பங்குடைமை முன்னேற்றமடைய வேண்டும்.  ஜனநாயகவாதிகள் என்ற அடிப்படையில் அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்படலாம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இவை பரஸ்பர கௌரவத்தின் அடிப்படையிலான கலந்துரையாடல்கள் மூலம் கையாளப்படும். எமது பொதுவான பாரம்பரியங்கள் மற்றும் பொது நலன்கள் எம்மை ஒன்றாக முன்னோக்கி செலுத்தும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39679-2012-04-21-10-24-43.html