தமிழ் ஸ்டுடியோவில் வேலை வாய்ப்புகள்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், புதிதாக தொடங்கப்படவிருக்கும் ஒரு புத்தகக் கடை, பதிப்பக வேலைகள் என தமிழ் ஸ்டுடியோவில் மட்டும் நான்கிற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இருக்கிறது. நாட்டில் வேலை இல்லா பிரச்சனை தீர்ந்து பல வருடகள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். நானும் விதை இயற்கை அங்காடிக்கு நல்லதொரு பணியாளை இரண்டு வருடங்களாக தேடிக்கொண்டேதான் இருக்கிறேன். எத்தனையோ வேலைவாய்ப்புகள் இருந்தும், அதற்குரிய ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தாலும், அந்த வேலையை செய்வதற்கான மனித சக்திதான் இப்போது தமிழ்நாட்டில் இல்லை. நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் உள்ளிட்ட நான்கு பணிகளுக்கும் உடனடியாக பணியாளர்கள் தேவை. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். தமிழ் ஸ்டுடியோ ஒரு நிறுவனம் அல்ல, இயக்கம். எனவே உங்களுக்கு உரிய அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்கும். எல்லாவற்றையும் தாண்டி, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு இயக்கத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்கும் இருக்க வேண்டியது அவசியம்.

தமிழ் ஸ்டுடியோவோடு சேர்ந்து பணிபுரிய விருப்பமுள்ள நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com