தமிழ் ஸ்டுடியோ அறிவிப்புகள்!

பேசாமொழி 7ஆவது இதழ் – இணையத்தில் படிக்க..

படிக்க: http://pesaamoli.com அல்லது  http://pesaamoli.com/index_content_7.html

தமிழ் ஸ்டுடியோ அறிவிப்புகள்!நண்பர்களே மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் “பேசாமொழியின்” 7ஆவது இதழ் வெளியாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன், யமுனா ராஜேந்திரன், டிராட்ஸ்கி மருது, ராஜேஷ் (கருந்தேள்), எஸ். ஆனந்த் (கோணங்கள்), எம். ரிஷான் ஷெரிப், சுரேஷ் சுந்தர், தினேஷ், அருண் மோ. விஸ்வாமித்திரன் போன்றோரின் கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமத்து படங்களில் தென் மேற்கு பருவக் காற்று எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை மிக ஆழமாக வெங்கட் சாமிநாதன் விவரித்துள்ளார். பாலஸ்தீன படமான டீவைன் இன்டர்வென்சன்ஸ் படம் பற்றியும், நடிகர் & இயக்குனர் மணிவண்ணன் பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும் யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளார். அனிமேசன் பற்றிய ஓவியர் மருதுவின் தொடரும், நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாக்கள் தொடர்பான கோணங்கள் ஆனந்தின் கட்டுரையும், இலங்கை இயக்குனர் பிரசன்னா விதானங்கே பற்றிய விச்வாமித்ரனின் கட்டுரையும், ரிஷானின் உலகப் படக் கட்டுரையும் மிக முக்கியமாக இந்த இதழில் நீங்கள் தவறவிட கூடாத கட்டுரைகள். பேசாமொழி, இணைய இதழ். கீழ்க்கண்ட இணைய முகவரியில் நீங்கள் இந்த இதழை இலவசமாகவே படிக்கலாம்.

படிக்க: http://pesaamoli.com/
http://pesaamoli.com/index_content_7.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com


பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…

தமிழ் ஸ்டுடியோ அறிவிப்புகள்! தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடைபெற்ற பேச்சரவம் – உரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான உரையாடலின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நண்பர்களுக்காக இந்த பகுதி.  சென்னையில் இருந்துக் கொண்டே கலந்துக் கொள்ளாத நண்பர்களும் இந்த ஒலிப்பதிவை கேட்கலாம். அடுத்த முறை வருவதற்கு முயற்சி செய்யுங்கள். http://koodu.thamizhstudio.com/pecharavam_1.php

குறிப்பு: முதல் நிகழ்ச்சி என்பதால், அத்தனை துல்லியமான ஒலிப்பதிவு அல்ல இது. எனவே கொஞ்சம் மெனக்கெட்டுதான் கேட்க வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு அது ஒன்றும் அத்தனை பெரிய இடையூறு இல்லை என்று நினைக்கிறேன்.
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com


 அம்ஷன் குமாரின்

தமிழ் ஸ்டுடியோ அறிவிப்புகள்!அம்ஷன் குமாரின் இந்த கதைகள் மிக முக்கியமானவை. மூன்று கதைகளையும் மூன்று கோணத்தில் சொல்லி இருக்கிறார். குறிப்பாக கதையை வெறும் கதையாக இல்லாமல், அதனூடாக அந்த கதைப்பற்றிய பல அருமையான தகவல்களையும், கதைகள் குறித்த சில புரிதல்களையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக பாரதியின் கதை குறித்து அவரது விளக்கத்தை அனைவரும் அவசியம் கேட்டே ஆகவேண்டும். கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_31.php
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com