தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!

தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல்.

நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்)
இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400
திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம்.

அறிவிப்பு இரண்டு:  படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை

முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை தாண்டி, எது சினிமா என்கிற உண்மையை உங்களுக்குள்ளிருந்தே உணரும் இடமாக இந்த பயிற்சி இயக்கம் அமையும்.

தமிழ் ஸ்டுடியோவின் படிமை திரைப்பட பயிற்சியின் இரண்டாவது Batch க்காக இதுவரை 7 நண்பர்களை தேர்வு செய்து வைத்துள்ளேன். இன்னமும் 5 நண்பர்கள் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்துக் கொள்ளலாம். எப்படியும் மார்ச் இறுதி வாரத்திற்குள் சேர்க்கை முடிக்கப்பட்டு, வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளேன். படிமை திரைப்பட பயிற்சி வகுப்பில், திரைப்படத்திற்கான வடிவம், உள்ளடக்கம் இரண்டிற்கும் தீவிரமான பயிற்சி அளிக்கப்படும். காட்சிப்படிமங்களின் வழியே, பார்வையாளனை ஒரு பயணத்திற்கு இட்டு செல்லவும், காட்சிப் படிமங்கள் எத்தகைய சக்திவாய்ந்த ஒன்று என்பதையும் இந்த பயிற்சியின் வழியே நண்பர்கள் அறிந்துக் கொள்ளலாம். ஒன்னரை வருடம் நடக்கும் இந்த பயிற்சி முழுக்க முழுக்க சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் மட்டுமே நடக்கும். இரண்டு நாட்களும், காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை பயிற்சி நடக்கும். இந்த திரைப்பட பயிற்சி திட்டத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். கட்டணம் ஏதுமில்லை, கிராமப் புற நண்பர்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. தகுதி என்று எதுவுமில்லை, ஆனால் தமிழ் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் இந்த பயிற்சி வகுப்பிற்கு வந்து வகுப்பெடுக்க இருக்கிறார்கள்.

தொடர்புக்கு: தினேஷ் 9578780400

————————————————————————————-

அறிவிப்பு மூன்று: பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.

நண்பர்களே, பாலு மகேந்திராவின் நினைவுக் கூட்டத்தில், பாலு மகேந்திராவின் பத்து சிறந்த படங்கள் (தமிழ், மலையாளம், கன்னடம்) அடங்கிய DVD தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் பெரிதும் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலு மகேந்திரா பெயரில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களுக்கு விருது கொடுத்து கவுரபடுத்தவுள்ளது என்கிற என்னுடைய அறிவிப்பையடுத்து, இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பை நண்பர்களுக்கு கொடுத்து, அதில் இருந்து நன்கொடை பெற்று, விருது நிகழ்வை இன்னமும் சிறப்பாக நடத்துங்கள் என்று ஆலோசனை சொன்னார்.

பாலு மகேந்திராவின் இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைக்கு கிடையாது. ஆனால், இதனை பெற விரும்பும் நண்பர்கள், பாலு மகேந்திரா விருது நிகழ்விற்காக நன்கொடையாக 1000 ரூபாய் கொடுத்து இந்த பத்துப் படங்கள் அடங்கிய DVD தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். கோகிலா, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், யாத்ரா, வண்ண வண்ணப்பூக்கள், சதி லீலாவதி, மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும் ஆகிய படங்கள் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.

இந்த பத்துப் படங்கள் அடங்கிய DVD தொகுப்பை பெற தொடர்பு கொள்ளுங்கள்: தினேஷ் 9578780400

(பாலு மகேந்திராவின் பெயரில் இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளான மே 19 ஆம் தேதி, சிறந்த கலைஞர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ விருது கொடுத்து கவுரப்படுத்த உள்ளது. எனவே நண்பர்கள், இந்த DVD தொகுப்பை அதிக அளவில் பெற்று, நன்கொடை கொடுத்து உதவ வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்)

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com