தமிழ் ஸ்டுடியோ – நூலகம்: திரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை.

தமிழ் ஸ்டுடியோ - நூலகம்: திரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை.நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை, state-of-the-art என்று சொல்லக்கூடிய வகையில், சினிமா தொடர்பான எல்லா தகவல்களையும், தேவைகளையும் ஒருங்கே கொடுத்து, நிறைய திரைப்பட ஆர்வலர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், மற்ற மொழி திரைப்படங்கள், மற்றமொழி குறும்படங்கள், திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள் திரைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவல் களஞ்சியம், என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அதனை திரைப்பட ஆர்வலர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழ் ஸ்டுடியோவின் எண்ணம். விரைவில் ப்ரொஜெக்டர் வாங்கியதும், தமிழ் ஸ்டுடியோ குறுந்திரை தொடங்கி, தினமும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்படும். நல்லப் படங்கள், சுயாதீன படங்கள், குறும்படங்கள் என எல்லா வகையான திரைப்படங்களையும் இந்த திரையரங்கில் காணலாம். தவிர, நண்பர்கள் தாங்கள் விரும்பும் படத்தை காண, முன்பதிவு செய்துக்கொண்டு, படத்தின் பெயரை தெரிவித்தால், அவருக்கு மட்டும் பிரத்யேக திரையிடலும் உண்டு. இதற்காக தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்தும் விரைவில் தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வெளியிடப்படும்.

திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள், புத்தகங்களை நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இருக்கும் நூலக அரங்கில் படித்துக் கொள்ளலாம். புத்தகத்தில் குறிப்படப்பட்டிருக்கும் படத்தை பார்க்க விரும்பினால், அதனை பார்க்கவும் வசதி செய்துத் தரப்படவிருகிறது. பழைய படங்களை ஆவணப்படுத்தும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கும் பார்க்க முடியாத படங்களை பார்க்கவும், கிடைக்காத புத்தகங்களை தேடி தரவும் தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது.

நண்பர்கள், தங்களிடம் இருக்கும் முக்கியமான திரைப்படம் சார்ந்த புத்தகங்கள், திரைப்படங்கள், திரைப்படம் சார்ந்த அரிய தகவல்களை, தமிழ் ஸ்டுடியோவின் இந்த நூலகத்திற்கு கொடுத்து உதவினால், பெரிதும் உதவியாக இருக்கும். திரைப்பட நூல்கள் மட்டுமின்றி, இலக்கியம் சார்ந்த நூல்களையும் கொடுக்கலாம். புத்தகங்கள், திரைப்படங்களை தமிழ் ஸ்டுடியோவின் நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நேரில் வந்து கொடுக்கலாம். கொரியரில் அனுப்பலாம். அல்லது தாங்கள் புத்தகம் கொடுக்கும் விருப்பத்தை தெரிவித்தால், தமிழ் ஸ்டுடியோ நண்பர்களே நேரில் வந்து பெற்றுக்கொள்வார்கள். உடனே உங்களிடம் இருக்கும் நூல்களையும், திரைப்படங்களையும் தமிழ் ஸ்டுடியோவின் நூலகத்திற்கு கொடுத்து உதவுங்கள். நண்பர்களிடம் தெரிவித்து, தமிழ் ஸ்டுடியோவிற்கு வழங்க பரிந்துரை செய்யுங்கள்.

தொடர்புக்கு: 9840698236
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

thamizhstudio@gmail.com
www.thamizhstudio.com