திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு நிகழ்வு!

திருமதி பிலோமினா லோறன்ஸ்தமிழர்விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், இலங்கை காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு நிகழ்வு ;  எதிர்வரும் 07.10.2012 ஞாயிறு பி.ப 3.00மணிக்கு பாரீசில்( பிரான்ஸ்) நடைபெற இருக்கின்றது. இந் நினைவு நிகழ்வில் பிலோமினா லோறன்ஸ் அவர்களின் அரசியல் – சமூகப் பயணங்களின் ஒளிப்படத் தொகுப்பான “நினைவின் யாத்திரை “யும், “நினைவுத் திசை ” என்னும் நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு நூலும் வெளியிடப்பட இருக்கின்றன. இந் நினைவு நிகழ்வில் திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களோடு சமகாலத்தில் பயணித்த அரசியல் – சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவ பகிர்வுகளையும் கருத்துக்களையும் வழங்கவுள்ளனர். இந் நிகழ்வு பின்வரும் முகவரியில் நடைபெறுகின்றது.

காலம் :07.10.2012 ஞாயிறு பி.ப 3.00 மணி  – 8.00 வரை
இடம்: SALLE  SAINT   BRUNO ,9 , RUE  SAINT  BRUNO, 75018 PARIS (La  chapelle லில்  அமைந்துள்ள  Saint Bernard  தேவாலயத்திற்கு அருகில்). மெற்றோ: LA CHAPEL LE
தொடர்புகளுக்கு 00 33  14 84 97 789 /   00 33  66 04 46  508( பிரான்ஸ்)

தகவல்: jeyarajany@hotmail.fr