தோழர் சண்முகலிங்கம் [ 23.06.1944 – 22.02.2013] மறைவு!

தோழர் சண்முகலிங்கம்முகநூலில் சண்முகலிங்கம் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்தேன். அவரின் மறைவு பற்றிய விடயத்தையும் பின்னர் முகநூல் மூலம் அறிந்தேன். உண்மையிலேயே துயரமாகவிருந்தது. நல்லதொரு மனிதர். தன்னைப்பற்றி தம்பட்டம் அடிக்காத,அமைதியாகத் தன் பங்களிப்பினை வழங்கியவர்.  தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன. நான் நினைத்தேன் அவர் இன்னுமொரு நகருக்குச் சென்று விட்டதாக. ‘காந்தியம்’ அமைப்புடன் பணியாற்றியவர். அதன் காரணமாகச் சிறைவாசமும் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் நேரங்களிலெல்லாம் அவரது அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரும்படி கூறுவதுண்டு. அதற்கவர் சிரித்துக்கொண்டு ‘ஓம்! ஓம்’ என்று தலையாட்டுவார். அவரைச் சந்திக்காமலிருந்தாலும் அவர் பற்றி அவ்வப்போது நினைப்பதுண்டு. ஒரு நாளாவது அவரைப் புன்னகை தவழாத முகத்துடன் பார்த்தது கிடையாது. அவரது மறைவால் துயருறும் நண்பர்கள், உறவினர்களுடன் நானும் தனிப்பட்டரீதியிலும், ‘பதிவுகள்’ இணைய இதழ் சார்பிலும் கலந்துகொள்கின்றேன். அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

மரணச்சடங்கு விபரம்:
வியாழன் பெப்ருவரி 28, 2013 5PM – 9PM
வெள்ளி பெப்ருவரி 29, 2013  9AM – 11AM

Ogden Funeral Home
Address: 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Ontario, Canada
Phone:(416) 293-5211

மேலதிக விபரங்களுக்கு…

1-416-840-7335
1-416-431-0718
1-647-878-2478