நன்றி! நன்றி! நன்றி!

பதிவுகள்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்”

கடந்த வாரம் ‘டொராண்டோ’ மாநகரினைத் துவம்சம் செய்த உறைமழைப்புயல் காரணமாக ஏற்பட்ட மின்சார இழப்பு நீங்கி, மின்சாரம் அடுத்த நாளே எமக்குக் கிடைத்துவிட்டபோதும் (இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கிடைக்காமலிருப்பது துரதிருஷ்ட்டமானது) இன்றுதான் – டிசம்பர் 28, 2013 –  இணையத்தொடர்ப்புக்கான சேவை மீண்டும் கிடைத்தது. இதன் காரணமாக கடந்த ஒருவார காலமாகப் பதிவுகள் இணைய இதழுக்கான பராமரிப்புப் பணி தடைப்பட்டுப்போயிருந்தது. படைப்புகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. உங்கள் படைப்புகள் பதிவுகளில் விரைவில் பிரசுரமாகும்.

தவிர, உறைமழைப்புயலால தரையெங்கும் பனிக்கட்டியாகிவிட்ட நிலையில் முகம் குப்புற விழுந்து சிறிது காயமும் ஏற்பட்டது. வாய்ப்பகுதி, மணிக்கட்டை  அண்மித்த வலது உள்ளங்கைப்பகுதி, வலது முழங்காலுக்கு மேற்பட்ட தொடைப்பகுதி ஆகியவற்றில் ஏற்பட்ட உட்காயங்கள் காரணமாக ஏற்பட்ட வலி இன்றுதான் சிறிது குறைந்தது. நல்லவேளையாக எந்தவித எழும்பு முறிவுகளோ, பல் உடைவுகளோ ஏற்படவில்லை. வந்த ஆபத்து வலியுடன் போனதென்று கூறலாம்.