நிகழ்வு: லண்டனில் கிங்ஸ்ரன் மேயரினால் விருதுபெற்ற இலங்கைப் பெண்மணிக்கு பாராட்டுவிழா.

1_navajothy1520147.jpg - 21.88 Kb‘தனது அயராத முயற்சியினாலும், சேவை மனப்பாண்மையோடும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் படைத்த சர்வலோகேஸ்வரிக்கு கிங்ஸ்ரன் மேயரின் விருது கிடைத்திருப்பதென்பது, தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளவேண்டிய விடயம், அவரது பல்வேறு சேவைகளையும் எடுத்துரைத்த’  திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கத்தின் ஆரம்ப உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
  
‘தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப்பண்போடு நேசித்து, எல்லோருக்கும்; தன்னால் முடிந்த வகையில் உதவிகள் புரிந்து வரும் சர்வலோகேஸ்வரியின் பண்பு பாராட்டுக்குரியது. ஆரம்பகாலங்களில் லண்டனில் ஆசிரியையாகப் பணிபுரிந்த சர்வலோகேஸ்வரி பின்னைய நாட்களில் வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் என ஆங்கில மொழி பேசுவதற்கு அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணிகள் புரிந்தவர். தனது குடும்பம், சொந்த விடயங்கள் என நின்றுவிடாது மற்றவர்களுக்கு பணிபுரியும் மனங்கொண்ட சர்வலோகேஸ்வரி அவர்கள் கிங்ஸ்ரன் மேயரால் விருது வழங்கி பாராட்டப்பட்டமை எமக்கு மிக மகிழ்சி தருகின்ற விடயம்’ என சமூகசேவையாளர் திரு. தணிகாசலம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.

‘சட்டன் தமிழ் மூத்தோர் வலுவூட்டும் திட்ட அமைப்பில் தானும் முன்னின்று முதியவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு மனத்திடத்தை வழங்கிய பெருமை சர்வலோகேஸ்வரிக்கு உண்டென’ தற்போதைய அவ்வமைப்பின் தலைவரான டாக்டரும், வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான கலாநிதி சிவ தியாகராஜா தனது உரையில் பாராட்டியிருந்தார்.
    
CCD, TIC  (தமிழர் தகவல் நிலையத்தின் தலைவர்), ‘மீட்சி’ பத்திரிகை ஆசிரியருமான திரு.வரதகுமார் பேசும்போது சர்வலோகேஸ்வரியின் உற்சாகமான புன்சிரிப்பையும், பல்வேறு இனமக்களையும் இணைத்துச் செயற்படுகின்ற விதத்தினையும் பாராட்டியதோடு அவருக்கான இவ்விருது தன்னை மகிழ்ச்சிப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
 
1_navajothy1520149.jpg - 25.15 Kb

சட்டன் தமிழ் பாடசாலையின் அதிபரும், அறிவிப்பாளரும், கவிஞருமான பா.வை. ஜெயபாலன் அவரின் சேவைகளை கவிதையாலும் பாராட்டியதோடு அவரின் மனைவி மாலையாலும், மகள் இனிமையான குரலால் பாடியும் அழகுடன் மகிழ்வித்திருந்தனர். 
  
மொழிபெயர்ப்பாளரும், சமூகசேவையாளருமான திருமதி சுமித்ரா இளஞ்செழியன், MILLAP அதிபர் திருமதி சாந்தினி சங்கரபாலன், லீலா, திரு. பொபி. பொன்னுத்துரை,  டாக்டர் ஆறுமுகராசா, மற்றும் லண்டனில் வயது வந்த அனுபவம் முதிர்ந்தவர்களினால் நடாத்தப்படும் சங்கத் தலைவர்கள் பலர்;, இளையவர்கள், கல்விமான்கள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,  பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டர்கள் என பலரும் சர்வலோகேஸ்வரியை கவிதைகளாலும், பாட்டுக்களாலும், உரைகளாலும் பாராட்டியிருந்தமை மிகச் சிறப்பாகவே இருந்தது.
    
1_navajothy11520143.jpg - 52.66 Kb

அறிவிப்பாளர் நவஜோதி ஜோகரட்னம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்.

navajothybaylon@hotmail.co.uk