நியுயோர்க்: நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி!

Sept 8, 2011 – அன்புடையீர்! மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பு நடவடிக்கை! ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.வட அமெரிக்காவிலுள்ள அத்தனை அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாகச் செய்ய உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

காலம்: வெள்ளிக்கிழமை, செப்ரெம்பர் 23 ம் திகதி, 2011
நேரம்: காலை 9:00 மணி ஒடக்கம் மாலை 5:00 மணிவரை
இடம்: ஐக்க்கிய நாடுகள் சபை முன்பாக

அன்புள்ள,கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர்

r.sivalingam@tgte.org
Dr. Ram Sivalingham <sivalingham@sympatico.ca