நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

கனடா – தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது நிறைவு விழாவும் மலர் வெளியீடும் ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோவிலில் தலைவர் சின்னையா சிவநேசனின் தலைமையில், ஏப்ரல் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரங்கு நிறைந்த விழாவாக சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ் வாழ்த்து, கனடாக் கீதம் என்பவற்றைத் தொடர்ந்து திவ்வியராஜனின் கணீரென்ற குரலில் வந்த பேசாப் பொருளை என்ற பாரதியாரின் பாடலுக்கு கலாய நடனப்பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி வந்திருந்தவர்களை வரவேற்றனர். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள்,  ‘புலம்பெ யர் இலக்கியங்களில் இலக்கியச் சிந்தனையின் போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

அதைத் தொடர்ந்து  நிகழ்ந்த, ஒன்ராறியோப் பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசனின் சிறப்புரையின் பின் சர்வதேச எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி வந்திருக்கும்  கனடா- தமிழ் எழுத்தாளர் இணைய மலரான சங்கப் பொழிலை இதழாசிரியர் தங்கராஜா சிவபாலு அவர்கள் வெளியீட்டு வைக்க, பேராசிரியர் சந்திரகாந்தன் அவர்கள் அதனை விமர்சித்தார்கள்.
பின்னர் இணையத்தின் கடந்த காலத் தலைவர்களுக்கான கெளரவமும், இணையத்தின் கட்டுரை, கவிதை, கதை, நாடகப் போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் நிகழ்ந்தது.

நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

விழாவில் சிறப்பு நிகழ்வுகளாக அரங்கேறிய,  கவிஞர்கள் புகாரி, உதயன் லோகேந்திரலிங்கம், சுல்பிகா, சித்தி விநாயகம் ஆகியோர் வழங்கிய  ‘நினைவழியா நாட்கள்’ கவிதை அரங்கும்; கவிஞர் கந்தவனம் தலைமையில் சட்டத்தரணிகள் தம்பையா ஸ்ரீபதி, கனகமனோகரன், லஷ்மி வாசன் மற்றும் கோதை அமுதன் ஆகியோர் பங்கு கொண்ட  ‘கனடாவில் கவின் கலைகளில் விஞ்சி நிற்பது கலையார்வமா, வணிகமா’ என்ற விவாத அரங்கும் சபையோரின் கலைப்பசியைத் தீர்த்தன. நிறைவில், செயலாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.

நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

தகவல்: பைரவி