நோர்வே: மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்!

இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக்  கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள்  இனப்படுகொலை நாள் (Holacaust)  என ஆண்டுதோறும் அனுட்டித்து  வருகிறார்கள்.  முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் எழுச்சி நிகழ்வாக இடம்பெறவிருக்கின்றது.

நேரம்: மாலை 5:00 மணிக்கு
காலம்: மே 18ம்
இடம்:   OSLO S ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன்  முடிவடையவுள்ளது.

எமது உரிமை பறிக்கப்பட்டு இன அழிப்பு நடந்துள்ளது என்பதனை நிலை நாட்டும்பொழுதுதான் எம் இனத்திற்கு ஆதரவான குரல் உலகத்தில் இருந்து வரும். இதனை முழுமையான சட்ட வழியிலேயே எம்மால் முன்னெடுத்து வெற்றி பெற முடியும்.

அளவிடமுடியாத எண்ணிக்கையில் வாருங்கள்
தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வாருங்கள்
பனித்துளிகளை உதறுவதைபோல உங்கல்  மீது பூட்டப்பட்ட
விலங்குகளை சிதறி அடியுங்கள்

tamilkultur2011@gmail.com