பத்தாவது ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ 23-11-2017 அன்று அதாவது நாளை 10வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ கடந்த வந்த பாதை உங்களுக்காக…

இன்றுவரை
* 2568 நிகழ்ச்சிகள்
* 3112 குறும்படங்கள் திரையிடல்
* 214 ஆவணப்படங்கள் திரையிடல்
* 355 உலகப் படங்கள் திரையிடல்
* 315 இந்தியாவின் ஆக சிறந்த திரைப்படங்கள் திரையிடல்
* 10,00,00 உறுப்பினர்கள்
* லட்சக்கணக்கான பார்வையாளர்கள் (தமிழ் ஸ்டுடியோ & பேசாமொழி&பியூர் சினிமா இணையத்தளத்திற்கு)
* 600 வெள்ளித்திரை படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்
* 24 மாவட்டங்களில் குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல்
* 16 பிரம்மாண்டமான பயிற்சிப் பட்டறைகள் (புகைப்பட பயிற்சி, சிறுகதை பயிற்சி, இயக்குனர் மிஷ்கின் பயிற்சிப் பட்டறை உட்பட)
* இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
* தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டம்
* தமிழில் மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் (http://thamizhstudio.com/Pesaamozhi/index.html)
* சினிமா தொடர்பான முக்கியமான நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்துக் கொண்டிருப்பது
* நூறு தமிழ்ப்படங்களை திரையிடுவது
* நூறு தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுடன் கலந்துரையாடல்

1. தமிழ்நாட்டில் முதல் முறையாக குழந்தைகளுக்கான உலகத் திரைப்பட விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடத்தியது

2. இந்தியாவில் வேறெங்கும் சாத்தியப்படாத திரைப்பட பயிற்சி இயக்கம் படிமை, இப்படியான ஒரு பயிற்சி இயக்கம் இரானில் மட்டுமே உள்ளது

3. புழக்கத்தில் இருந்து அறவே அழிந்துப் போன கதை சொல்லல் முறையை மீண்டும் இணையத்தில் கொண்டுவந்தது…

4. குறும்படங்களுக்கான சந்தை மற்றும் போட்டிகளை அதிகளவில் உருவாக்கியதில் பங்கு, குறும்படங்களை தொடர்ச்சியாக திரையிட்டும் விவாதித்தும் அதற்கான தளத்தை உருவாக்கியது

5. 2010 ஆம் முதல் சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக உருவாக்கிய லெனின் விருது

6. 2014 ஆம் ஆண்டு முதல் குறும்படங்களுக்கான பாலு மகேந்திரா விருது

7. 2016 ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தமிழ் ஸ்டுடியோ விருது

8. பிரான்சில் மட்டுமே நடைபெற்று வந்த திரைப்படங்களைப் பார்க்கும் ரசனை முறையை பௌர்ணமி இரவாக தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது

9. ரசனை மாற்றத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டால் தலைப்பில், தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில்,தினசரி திரைப்படங்கள் திரையிடல் நடத்துவது

10. அரசு தணிக்கை மற்றும் கும்பல் தணிக்கையால் திரையரங்கிற்கு வர முடியாத படங்களை திரையிடுவதற்கான வெளியை உருவாக்கியது.

11. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒவ்வொரு குறிப்பிட்ட தலைப்பின் (theme) கீழ் வெளிவரும் மாத அச்சிதழ் படச்சுருள். இதுவரை தணிக்கை, தலித் சினிமா, ஆவணப்படுத்துதல், தமிழ் சினிமாவில் பெண்கள் சிறப்பிதழ் என தொடர்ந்து தமிழ் இதழியல் வரலாற்றில் முதல்முறையாக மாற்றுப்பாலீர்ப்பு சமூகம் சார்ந்த சினிமாவை மையமாக கொண்டு சென்ற மாதம் வெளியான படச்சுருள் வரை தமிழ் சினிமாவிற்கு கல்வியியல் ரீதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

12. இந்தியாவில் இரண்டாவது, தமிழ்நாட்டின் முதல் சினிமாவிற்கான பிரத்யேக புத்தக அங்காடி பியூர் சினிமா புத்தக அங்காடியை உருவாக்கியது.

2018 இல்…

1. உலகின் முதல் வீடியோ மாத இதழாக “The Whitepaper” வெளிவரவிருக்கிறது.

2. உலகின் முதல் சுயாதீன திரைப்பட பயிற்சி அகடெமியாக சாப்ளின் பிலிம் அகாடெமி தொடங்கப்படவிருக்கிறது.

3. பிப்ரவரி மாதம் “சென்னை சர்வதேச சுயாதீன திரைப்பட திருவிழா நடைபெறவிருக்கிறது…

இன்னும்…

இதனை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் அன்புகலந்த நன்றி.

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com