பயனுள்ள ‘படிப்பகம்’

'படிப்பகம்' இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம்‘படிப்பகம்’ இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம். மிகவும் அரிய நூல்களான மார்க்சின் ‘மூலதனம்’ (தமிழில்), மார்க்ஸ்-எங்கெல்ஸ்ஸின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ உட்படப் மேலும் பல நூல்களை நீங்கள் வாசிக்க முடியும். இதுதவிர ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள், அவற்றின் அறிக்கைகள், புலம் பெயர்ந்த தமிழிலக்கிய உலகில் உருவான சஞ்சிகைகள் போன்ற பல ஆக்கங்களை, தகவல்களை இங்கு ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கு ஆக்கங்களை வாசிப்பதற்கு நீங்கள் உங்களை இத்தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எதுவுமில்லை. அதன்பின் ஆக்கங்களை வாசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் செல்ல வேண்டிய இணையத்தள் முகவரி: http://www.padippakam.com    – ஊர்க்குருவி –