பலூனில் மாட்டிக் கொண்ட சிறுமி.

கவிதை வாசிப்போமா?
பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி
தவறி அதனுள் விழுந்துவிட்டாள்.
அவளுடைய மூச்சுக் காற்றில்
பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது

அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது.
பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல
தத்தளித்துக் கொண்டிருந்தாள்
பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட
பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.

பலூன் ராட்சசியைப் போல பசியோடு
பூதமென அவளுடைய மூச்சுக் காற்றை உண்டு
பெரிதாகிக் கொண்டிருந்து.
ஆக்சிஜனின்றி மயங்கிக் கிடந்தவளை
ஹோலோசோயியைப் போல விழுங்கியது.
செரித்த அவளுடைய உடலை எச்சிலைப் போல
மீண்டும் இந்த உலகில் த்தூ எனத் துப்பியது.

karigaikutty@gmail.com