பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிதோழர் கு. சின்னப்ப பாரதி நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடலில் தோழர் வி. ரி. இளங்கோவன்ää பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி – இந்திய கம்யூனிஸ்ட்; கட்சி – மார்க்சிஸ்ட் – கட்சிகளுக்கிடையிலான நல்லுறவு, இலக்கியப் பரிமாற்றம், சர்வதேச நிலைமைகள், உலக மயமாக்கலின் விளைவுகள், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் உட்படப் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட  கு. சின்னப்ப பாரதியின் ‘Le Réveil’ நாவலை பிரெஞ்சு மக்கள் மத்திக்கு பரவலாக எடுத்துச்செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாரிஸ் மாநகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டார். பாரிஸ் மாநகரில் வாழும் தமிழ் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினர். ஒரு வாரத்தின்பின் நெஞ்சம் நிறைந்த தோழமை உணர்வுகளைச் சுமந்தவாறு தோழர் கு. சின்னப்ப பாரதி தமிழகம் திரும்பினார். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் சார்பில் தோழர் வி. ரி. இளங்கோவன் ஒழுங்குசெய்த, பாரிஸ் மாநகரில் கடந்த 15 -ம் திகதி (15 – 07 – 2012) நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும் கு. சின்னப்ப பாரதியின் ‘Le Réveil’ நாவல் வெளியிடப்பட்டது. தோழர் பியர் மார்சி (Pierre Marcie) இந்நாவல் குறித்து இங்கு சிறப்புரையாற்றினார். தோழர் கு. சின்னப்ப பாரதியின் பாரிஸ் பேச்சுவார்த்தைகள் யாவற்றுக்கும் தோழர் வி. ரி. இளங்கோவன் உடனிருந்து உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள் …..

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி

vtelangovan@yahoo.fr