பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்!

மா. அரங்கநாதன்இந்திரா பார்த்தசாரதிஜெயகாந்தன்நண்பர்களே, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற தமிழின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமைகளை கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட ரவிசுப்ரமணியன் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். என்னிடம் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மூன்று ஆளுமைகளின் ஆவணப்படத்தையும் ரவிசுப்ரமணியன் தன்னுடைய இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மூன்று ஆவணப்படங்களையும் நான் பொக்கிஷம் என்றே சொல்வேன். இந்த ஆவணப்படங்களை இலவசமாக ரவிசுப்ரமணியன் அவர்கள் இணையத்தில் பார்க்கலாம். எனவே இனியும் யாரும் இந்த மூன்று ஆவணப்படங்களையும் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. மேலும் ரவிசுப்ரமணியன் மிக சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர். தன்னுடய குரலில் மிக முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை வாய்ப்பாட்டாக உருவாக்கியுள்ளார். அதில் சில பாடல்களும் இந்த இணையத்தில் கேட்க கிடைக்கிறது. தவறவிடாதீர்கள். 

http://www.ravisubramaniyan.com/
http://www.ravisubramaniyan.com/index.php?option=com_content&view=article&id=45;2012-05-16-10-58-59&catid=8;2012-03-21-12-26-49
http://www.ravisubramaniyan.com/index.php?option=com_content&view=article&id=42;2012-03-21-12-16-02&catid=8;2012-03-21-12-26-49
http://www.ravisubramaniyan.com/index.php?option=com_content&view=article&id=43;2012-03-21-12-16-43&catid=8;2012-03-21-12-26-49
 
அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com