மலேசியா: மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் படைக்கும் பொங்கல் கலாசார விளையாட்டுப் போட்டி

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம்  படைக்கும் பொங்கல் கலாசார விளையாட்டுப் போட்டிசங்கத்தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் எதிர்வரும், 24.2.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரையில் ஷா ஆலாம்,செக்‌ஷன்7, மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மைதானத்திலும், சிற்றுண்டிச் சாலையிலும் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் கலாசார விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெறவிருக்கின்றன. பெண்களுக்கான  கோலப்போட்டி, விளக்கேற்றுதல், பூக்கட்டுதல்,சொல் விளையாட்டு இன்னும் பல போட்டிகளும் ஆண்களுக்கான சட்டி உடைத்தல்,மட்டை கட்டுதல், தோரணம் பின்னுதல்,இசை நாற்காலி போன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பள்ளி ஆசிரியர்களும் சிறுவர்களும் கலந்து கொள்ளும் வெற்றியாளர்களுக்குக் கவர்ச்சியானப் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இப்போட்டி விளையாட்டு நிகழ்வில்,சங்க  உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகின்றனர். போட்டி சம்பந்தமாக ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

திரு.மு.குணாளன் -016 3100011 திரு.ச.நாரயணன் -013 2758142
திரு.சு.சரவணன் -010 2194055   திரு. மு.இளங்கோ -012 3175417

arunveloo@yahoo.com