மலேசியா: ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலாம் ஆண்டுக்காண மாணவர் பதிவு

மலேசியா: ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலாம் ஆண்டுக்காண மாணவர் பதிவுஷா ஆலாம்,மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, 2014 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டுக்காண புதிய மாணவர்கள் சேர்க்கும் நடவடிக்கையில்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தலைவர்  திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளியின்சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள செக்‌ஷன் 7, பாடாஞ் ஜாவா,கம்போங் சுங்கை இராசா,கம்போங் மணிமாறன்,ரிம்பா ஜெயா மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கும் நேரில் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர். பள்ளித் தலைமையாசிரியை திருமதி.  கோ.வரலட்சுமி அவர்களின் ஒத்துழைப்புடன்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.ந.இரவிந்திரன், துணைத்தலைவர் திரு.மு.கணேசன் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் நேரிடையாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.பள்ளி வாரியம் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பை வழங்கி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. பள்ளிப் பிள்ளைகளின் போக்குவரத்துக்குப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வகையில் பெற்றோர் களுடன் சந்திப்பு மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இன்னும் பிள்ளைகளைப்பதிவு செய்யாத பெற்றோர்கள் பள்ளியின் அலுவலக நேரத்தில் விரைந்து பதிவு செய்துக்கொள்ள  அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.                                
 
தொடர்புக்கு:  திரு. வே.ம.அருச்சுணன் – 012 6152537
திரு. ந. இரவிந்திரன் – 0126860605
திரு. மு. கணேசன் –  0192727256

மலேசியா: ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலாம் ஆண்டுக்காண மாணவர் பதிவு

arunveloo@yahoo.com