முல்லை அமுதன் தொகுக்கும் ‘எழுத்தாளர் விபரத் திரட்டு’

முல்லை அமுதனின் 'எழுத்தாளர் விபரத் திரட்டு'முல்லை அமுதன்எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். ‘காற்றுவெளி’ என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். மறைந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை அடங்கிய ‘இலக்கியப் பூக்கள் (தொகுதி ஒன்று)’ நூலினையும் வெளியிட்டவர். நூல்கள் பலவற்றையும் வெளியிட்டவர். தற்போது எழுத்தாளர் விபரத் திரட்டு என்னும் நூலினைத் தொகுத்து வருகின்றார். எதிர்காலத்தில் நூலாக வெளிவரவுள்ள இந்நூல் பற்றிய விபரங்களை ‘நெய்தல்’  இணையத்தளத்தில் காணலாம். தற்போதுள்ள தொகுப்பு பூரணமானதல்ல. பலர் விடுபட்டிருக்கின்றார்கள்; தகவல்களில் ஒரு சில தவறுகள் காணப்படுகின்றன. இவை பற்றிய உங்கள் கருத்துகளை எழுத்தாளர் முல்லை அமுதனுக்கு mullaiamuthan_03@hotmail.co.uk என்னும் மின்னஞ்சல் மூலம் அறியத் தரவும். இந்நூல் மேலும் பூரணத்துவம் பெற்று சிறப்பாக வெளிவருவதற்கு உங்களது கருத்துகள் நிச்சயம் உதவும். மேற்படி நூல் பற்றிய விபரங்களுக்கான இணையத்தள முகவரி: http://writersdetail.blogspot.com/   தகவல்: முல்லை அமுதன் – mullaiamuthan_03@hotmail.co.uk