மெல்பனில் தமிழக படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனுடன் இலக்கிய சந்திப்பு!

தமிழச்சி தங்கபாண்டியனின் 'நிழல் வெளி'தமிழச்சி தங்கபாண்டியன்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளரும்  இலக்கிய ஆய்வாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்ளும் இலக்கியச்சந்திப்பு மெல்பனில்,  வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ( 25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

‘மஞ்சனத்தி’, ‘வனப்பேச்சி’,  ‘எஞ்சோட்டுப்பெண்’, ‘சொல் தொடும் தூரம்’, ‘நிழல் வெளி’, ‘பேச்சரவம் கேட்டிலையோ’, ‘பாம்படம், மயிலிறகு மனசு’, ‘மண்வாசம்’ முதலான நூல்களை எழுதியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அவுஸ்திரேலியாவில் புகலிடத்தமிழர்களின் கலை, இலக்கிய  வெளிப்பாடுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். அரங்கச்செயற்பாடுகளிலும் ஈடுபாடுள்ளவர். நடைபெறவுள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழச்சி தங்கபாண்டியனின் நிழல் வெளி நூலும் அறிமுகப்படுத்தப்படும். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.

Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>