மேலும் சில கடிதங்கள்…

வாசகர் கடிதங்கள் rajamanickam manickam <rajamanickam29583@gmail.com>
To:Navaratnam Giritharan

வணக்கம், தகவலுக்காக…, சொல் தேடுதல் தொடர் தீக்கதிரில் எழுதிவருகிறேன். இந்த வாரம் வகிபாகம் –  அக்கினிக்குஞ்சு இதழ் மற்றும் பதிவுகள் இணைய இதழிலிருந்து எடுத்தாண்டேன்…

புதிய சொல் , பழைய தேடல் – 15  வகிபாகம் – அண்டனூர் சுரா

‘தமிழகத்தில் புரத வண்ணார்கள்’ – த.தனஞ்செயன் எழுதிய ஒர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள்  ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க  சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில்  ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக்  (கி.பி 6 – 12 ) காலத்திற்கு முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக  பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ;  செய்யும் தொழிலைக் கொண்டு சாதி,  சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர்  பேரா.வீ.அரசு. ‘ தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ‘ குடித்தொழில் பெறும் வகிபாகம் ‘ .

அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ‘ ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ‘ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் ” சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது “.

இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய  நாளிதழ்  ‘வீரகேசரி’. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ‘ கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் ‘. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் ‘வகிபாகம்’ ?

பேரா.கார்த்திகேசு சிவதம்பி –  தமிழ்நல்லுலகு அறிந்த அறிஞர்.  இவர் பத்திரிகைத் துறையில் பயன்பாட்டிலிருக்கும் பொருத்தமற்ற சில சொற்களைத் திருத்தி பயன்பாட்டிற்கேற்ப புதிய சொற்களாகப் பயன்படுத்தத் துவங்கினார். அதன்படி  உதவி ஆசிரியர் என்பதை செம்மைப்படுத்துனர் என மாற்றினார். பிரதம ஆசிரியர் எழுதும் அல்லது தரும் கட்டுரைகளைத் திருத்தம் செய்து செம்மைப்படுத்துவதால் அதற்கு அப்படியொரு பெயர். அதேப்போன்று காப்பி எடிட்டிங் என்பதை செம்மைப்படுத்துதல் என்றார். அந்த வரிசையில் அவர் பயன்படுத்திய  ஒரு சொல்தான் வகிபாகம்.

கொழும்பு இதழியல் கல்லூரி – ஊடகத்துறை தொடர்பான ஒரு நூலுக்கு அவர் எழுதிய ஒர் அணிந்துரையில் ‘ஏதேனும் ஒரு துறையில் யாரேனும் ஒருவர் முக்கிய பங்களிப்பு செய்தால் அல்லது வரலாற்று ரீதியாக ஒன்றை குறிப்பிடுவதாக இருந்தால்  அதனை வகிபாகம் என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும் ‘ என்றார்.

இச்சொல் குறித்து தேடுகையில் தற்கால தமிழ் அகராதிகளும், ஈழத்தமிழ் அகராதிகளும் இச்சொல்லை சொற்களஞ்சியத்தில் சேர்க்கவில்லை எனத் தெரியவருகிறது.   ஆனால் ஆங்கில அகராதி இச்சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. Role allocation – வகிபாகம் ஒதுக்குதல் Role of environment – சூழல் வகிபாகம்…இப்படியாக.

இதிலிருந்து வகிபாகம் என்பதை இப்படியாகப் பொருள் கொள்ளலாம். ஒரு பாத்திரமாக பங்கு வகித்தல்.


Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
To:uthayam12,Dave Tembo,Jeyakumaran Chandrasegaram,Sellamuthu Krishnamoorthy,editor
Nov. 9 at 12:48 a.m.

From: Neelambigai Kanthappu <kanthappu.neelambigai@gmail.com>
Date: Fri, 9 Nov 2018 at 14:05
Subject: Re: அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்!
To: Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>

மதிப்பிற்குரிய ஐயா, தங்கள் கட்டுரையில் எஸ் .பொ பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள் .2011இலங்கையில் யுத்தம் முடிந்திருந்தாலும் குடாநாட்டுப் பத்திரிகைகள் மாத்திரம் வாசிக்கக் கிடைத்தன .பொதுவாக எல்லாச் செய்திகளும் மஹிந்தவின் பணத்திலேயே மகாநாடு நடைபெற இருப்பதாக கூறின .ஓ.கே குணநாதன் என்றும் என் நன்றிக்குரியவர் .அவர் புலம்பெயர் எழுத்தாளர்கள் 150டொலர் வீதம் வழங்கியே மகாநாடு நடைபெற இருப்பதாக கூறினார் .அவர் கூறியவிதம் என்னை நம்பவைத்தது .எஸ் .பொ தான் அவுஸ்ரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்வதாகவும் தங்கள் அமைப்பு பற்றித் தனக்கு தெரியாது என்றும் தினக்குரலில் அரைப்பக்க கட்டுரை வெளியிட்டிருந்தார் .நான் எனது 57[2008]வயதில் சில ஏமாற்றங்களால் ஓய்வு பெற்று விட்டேன் .பாடசாலையில் இருந்த காலத்தில் தங்கள் அமைப்பில் பொன் சத்தியநாதன் பற்றி எதோ ஒரு தகவல் வந்தது .பாடசாலை நூலகத்தில் அதனை வாசித்தேன் .இலங்கையில் யுத்த சூழலில்இலக்கியத் தொடர்பு இல்லாத நான் அறிந்த இலக்கியம் தொடர்பான விடயம் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்த இலக்கியவாதிக்குத் தெரியாதாம் .எப்படி இவர்களையெல்லாம் ரொம்ப மதிக்கின்றிர்களே .தங்கள் மகாநாட்டில் பங்குபற்றியதால் அங்கு என்னைப்பாராட்டிய மன்னாரைச் சேர்ந்த சிவகரன் தனது தமிழமுதம் சஞ்சிகைக்கு என்னை ஒரு கட்டுரை எழுதித் தரும்படி வற்புறுத்தினார் .அவருக்கு எழுதியதே காலம் தொடர்பான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க முடியாத2012ல் வாசித்த கட்டுரை.அக்கட்டுரை எழுத தாங்களும் காரணமாக இருந்ததால் என் மதிப்பிற்குரியவர் .நன்றி

அன்புடன்
நீலாம்பிகை .


Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>

To:NAVARATMAM GIRITHRAN

Nov. 2 at 7:00 p.m.

வணக்கம். சிறுகதைப் போட்டி பற்றிய தகவலை பதிவுகளில் வெளியிட்டு ஆதரவு தந்தமைக்காக எழுத்தாளர் இணையத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்

குரு அரவிந்தன்


Mooventhan Ps <psmnthn757@gmail.com>
To:Navaratnam Giritharan
Oct. 19 at 9:56 p.m.
பேரன்புடையீர்,
வணக்கம். தாங்கள் நடாத்தும் இணைய இதழ்ப்பணியை நன்றிப்பெருக்கோடு பாராட்டுகின்றேன். உலகத் தமிழர்களை இலக்கியத்தால் ஒன்றிணைக்கும் தங்களின் முயற்சிகள் மேன்மேலும் செழிக்க வாழ்த்துகிறேன்.

வணக்கம்

என்றும் தமிழுடன்
முனைவர் ப.சு. மூவேந்தன்
உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைநகர்
இந்தியா.


Maha lakshmi <drmaha08@gmail.com>
To:Navaratnam Giritharan
Oct. 8 at 6:06 a.m.

மதிப்பிற்குரிய ஐயா,
தமது பதிவுகள் இணைய இதழில் தொல்தமிழர் நாகையும் நாகூரும் என்ற எனது கட்டுரையைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

இப்படிக்கு
முனைவர் த. மகாலெட்சுமி
முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113


M.Tamil Vanan <tamilveppp@gmail.com>
To:Navaratnam Giritharan
Sep. 3 at 8:23 a.m.

மதிப்பிற்குரிய ஐயா,
எமது செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில் என்ற கட்டுரையை வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி

முனைவர் ம. தமிழ்வாணன்
முதுநிலை ஆய்வு வல்லுநர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600113.


 

From: Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
To: Navaratnam Giritharan <ngiri2704@rogers.com>
Sent: Thursday, October 4, 2018 9:24 PM
Subject: உங்களை பாராட்டத் தோன்றியது.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.   நீங்கள் எழுதியிருக்கும் உங்கள்  “வாசிப்பும் யோசிப்பும்  பத்தியில் பாட்டைசாரியின் ”பாதை ஓரத்தில்”! ‘பாட்டைசாரி’ யார்? மிகவும் சுவாரஸ்யமானது. இலக்கிய, அரசியல், சமூகத்தேடலில்  ஈடுபடுபவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் அவை. எழுபது ஆண்டுகளுக்குப்பின்னரும் மட்டுமல்ல எக்காலத்திலும்  பொருந்தக்கூடிய பத்தி எழுத்து அது. மூத்த எழுத்தாளர் அ.செ.மு. அவர்கள்தான் இதுபோன்ற தீர்க்கதரிசனமிக்க எழுத்துக்களை எழுதியிருக்கிறார் என்பதை உங்களது தேடலிலிருந்து அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களது இம்முயற்சி எமக்கும் பயன்தருவதனால் உங்களை பாராட்டத்தோன்றியது. வாழ்த்துக்கள். நீங்கள் தெரிவித்திருப்பதுபோன்று பாட்டைச்சாரியின் பத்தி எழுத்துக்களை தொகுத்து சமகால வாசகர்களுக்கு வழங்கவேண்டும்.

அன்புடன்


Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
To:kulendiren2509@gmail.com,Navaratnam Giritharan
Feb. 24 at 6:04 a.m.

அன்புள்ள திரு. பொன்.குலேந்திரன் அவர்கட்கு வணக்கம். நீங்கள் எழுதியிருக்கும் ” வில்லுப்பாட்டுக்காரன்” என்ற ( யாவும் கற்பனை உண்மையும் கலந்தது ) என்ற நடைச்சித்திரம் (அது கதையல்ல நடைச்சித்திரம்தான்) படித்தேன். நீங்கள் குறிப்பிடும் பெரி. சோமாஸ்கந்தர் எனது ஆசிரியர். அவர் எங்கள் நீர்கொழும்பில் ஆசிரியராக இருந்தவர். எனது மதிப்பிற்குரிய ஆசான். அத்துடன் எங்கள் பெற்றோரின் குடும்ப நண்பர். அவரது திருமணத்திற்கும் எனது பெற்றோர் சென்றிருக்கிறார்கள். அவர் பற்றி காலமும் கணங்களும் என்ற எனது தொடரில் ஒரு அங்கம்  எழுதியிருக்கின்றேன். அத்துடன் அவர் எமக்கு உறவினருமாகிவிட்டார். அவரது அக்கா முறையானவரின் மகள் கெங்காதேவி ஶ்ரீமுருகனின் மகனைத்தான் எனது தங்கை மகள் திருமணம் செய்து தற்போது கட்டாரில் இருக்கிறார்கள். ஶ்ரீமுருகனும் உடப்பைச்சேர்ந்தவர். சோமஸ்கந்தரின் வீட்டுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் சென்றிருக்கின்றேன். நீங்கள் எழுதியிருக்கும் இந்த நடைச்சித்திரம் உண்மைச்சம்பவங்கள் கொண்டதுதானா..? அல்லது வெறும் புனைவா..? வெறும் புனைவு என்றால் உண்மையாக வாழ்ந்திருப்பவர் குடும்பத்தில் இப்படியெல்லாம் நடந்ததா..? உண்மையாயின் இந்தத்தகவல் எனக்கும் தெரிந்திருக்கவேண்டும்!!!??? ஆனால் தெரியாது…!? எது உண்மை எது புனைவு என்பதை அறியவிரும்புகின்றேன். சோமஸ்கந்தரின் மகன் ஒருவரை எனக்கு நன்குதெரியும். அவரும் ஒரு ஆசிரியர் என்பதும் தெரியும். அங்கிருக்கும் எனது நண்பரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான உடப்பூர் வீரசொக்கனிடம் உங்கள் நடைச்சித்திரத்தை அனுப்பி, இதிலிருக்கும் உண்மைத்தன்மையையும் அறிய விரும்புகின்றேன். நன்றி. இதன் பிரதியை நண்பர் கிரிதரனுக்கும் அனுப்புகின்றேன்.

அன்புடன்
முருகபூபதி – அவுஸ்திரேலியா


Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
To:Navaratnam Giritharan
Jan. 14 at 7:00 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஆண்டாள் பற்றிய சர்ச்சை டீ.செல்வராஜின் “நோன்பு” சிறுகதையிலிருந்து முன்னரும்  தொடங்கியது.  ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து அதனை நீக்கச்செய்தார்கள். தற்போது  வைரமுத்து இந்துத்துவாக்களிடம் சிக்கியுள்ளார்.

அன்புடன்
முருகபூபதி